சினிமா செய்திகள்

மீடூ விவகாரம் : இயக்குனர் மீது நடிகை சலோனி சோப்ரா பாலியல் புகார் + "||" + Saloni Chopra: Sajid Khan told me casting couch was not about one-time sex

மீடூ விவகாரம் : இயக்குனர் மீது நடிகை சலோனி சோப்ரா பாலியல் புகார்

மீடூ விவகாரம் : இயக்குனர் மீது நடிகை சலோனி சோப்ரா பாலியல் புகார்
பாலிவுட் நடிகை சலோனி சோப்ரா நடிக்க வருவதற்கு முன்பு இயக்குனர் சஜித் கானிடம் உதவியாளராக இருந்தார். அப்போது சஜித் கான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை, 

7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது பற்றி சலோனி சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

நான் படம் இயக்குவது குறித்து தெரிந்து கொள்ள ஒரு இயக்குனரிடம் உதவியாளராக சேர விரும்பினேன். அப்போது நான் சஜித் கானிடம் வேலை கேட்டு நேர்காணலுக்கு சென்றேன். நேர்காணலில் நீ சுய இன்பம் காண்பாயா?, ஒரு வாரத்தில் எத்தனை முறை? யாராவது உனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களா என்று கேட்டார். நான் ஆமாம் என்றேன்.

நான் மார்பகத்தை பெரிதாக்க ஏதாவது செய்தேனா என்று கேட்டவர், செக்ஸ் பற்றி பேசினார். நேர்காணலின் முடிவில் எனக்கு அழுகை வந்து விட்டது. ஏன் என்று தெரியவில்லை. அவர் முன்பு அசவுகரியமாக உணர்ந்ததாலா என்னவோ என்று தெரியவில்லை. எனக்கு வேலை கிடைத்து விட்டது. முதலில் நான் வேலைக்கு சேர்ந்த போது நீ உதவி இயக்குனர் இல்லை எனக்கு உதவியாளர் என்று சஜித் தெரிவித்தார்.

அவர் கண்ட நேரத்தில் எல்லாம் எனக்கு போன் செய்தார். அவர் எப்பொழுது போன் செய்தாலும் எடுக்க வேண்டும். வேலையை தவிர பிற விஷயங்கள் பற்றி தான் பேசுவார். நான் நடிகையாக விருப்பம் உள்ளதா என்று கேட்டார். எனக்கு பல மாதங்களாக டார்ச்சர் கொடுத்தார். நீ நடிகையாக செக்சியாக இல்லை என்றார். என்னை நடிகையாக்குவதாகவும் ஆசை காட்டினார். அவர் தொல்லையை எல்லாம் பொறுத்துக் கொண்டேன்.

அவர் அப்போது ஒரு அழகான நடிகையை காதலித்தார். அந்த நடிகை பற்றி தப்புத் தப்பாக பேசுவார். அவர்களின் செக்ஸ் வாழ்க்கை பற்றி கூறுவார்.  அவருக்கு செக்ஸ் ஆசை அதிகம் என்றும் தெரிவித்தார். ஒரு நாள் காஸ்ட்யூம் டிரையலின்போது ஒரு பெண்ணை பின்னழகை காட்டுமாறு கூறினார். அந்த பெண் பயந்து விட்டார்.  பின்னாடியும், முன்னாடியும் ஒன்னுமே இல்லாமல் நீ எல்லாம் நடிக்க வந்துவிட்டாயா என்று கேட்டார்.

உங்களுக்கு என்னுடன் உறவு கொள்ள வேண்டுமா, அதற்கு தான் இந்த பாடு படுத்துகிறீர்களா. உங்கள் ஆசையை தீர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அதன் பிறகு என்னை டார்ச்சர் செய்யக் கூடாது என்றேன். அதற்கு அவரோ எனக்கு அழகான காதலி இருக்கிறார். நீ என் கீப்பாக இருக்க வேண்டும். நான் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்றார்.

அவருடன் வந்து தங்குமாறு பலமுறை கேட்டுள்ளார்.   ஒரு நாள் என் கண் முன்பு பேண்ட்டை கழற்றி  உன்னை பார்த்தால்  ஒன்றும் ஆகவில்லை என்றார்.  அந்த சம்பவத்திற்கு பிறகு நான் அவரிடம் பணிபுரிவதை நிறுத்தி விட்டேன் என்று சலோனி தெரிவித்துள்ளார்.