சினிமா செய்திகள்

அழகுக்கு ‘மேக்கப்’ போடுவதை விரும்பாத தமன்னா + "||" + makeup Beauty Unwilling Tamanna

அழகுக்கு ‘மேக்கப்’ போடுவதை விரும்பாத தமன்னா

அழகுக்கு ‘மேக்கப்’  போடுவதை விரும்பாத தமன்னா
நான் அழகை பராமரிக்க அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
தமன்னாவுக்கு ‘பாகுபலி’ திருப்புமுனை படமாக அமைந்தது. சைரா நரசிம்ம ரெட்டி என்ற சரித்திர படத்திலும், தேவி–2 என்ற திகில் படத்திலும் நடிக்கிறார். அழகாக இருப்பது பற்றி தமன்னா கூறியதாவது:– 

‘‘சினிமா துறை கவர்ச்சி உலகம். இங்கு அழகு முக்கியமானது. அதை விட திறமையும் இருந்தால்தான் நிலைத்து நிற்க முடியும். 10 வருடத்துக்கு மேலாக சினிமாவில் நீடிக்கிறீர்கள். ஆனாலும் உங்கள் அழகு கொஞ்சம் கூட குறையவில்லையே என்று பலரும் கேட்கிறார்கள். அழகாக இருப்பதற்கு என்ன செய்கிறீர்கள். அந்த ரகசியத்தை சொல்லுங்கள் என்றும் கேட்கின்றனர். 

நான் அழகை பராமரிக்க அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை. மாலையில் படப்பிடிப்பு முடிந்து ‘பேக்கப்’ சொன்னதும் ‘மேக்கப்’பை கலைத்துவிட்டு சாதரணமான பக்கத்து வீட்டு பெண்ணாக மாறிவிடுவேன். சாதாரண பெண்கள் அழகுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ நானும் அந்த அளவுக்குத்தான் கொடுப்பேன். 

கதாநாயகியாக இருப்பதால் அழகை எப்படி காப்பாற்றிக்கொள்வது என்று எனக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இப்போதும் அழகு வி‌ஷயத்தில் எனது தாயின் ஆலோசனைகளைத்தான் கடைபிடிக்கிறேன். அழகுக்கு பழைய காலத்து முறையைத்தான் பின்பற்றுகிறேன். அழகு சாதன பொருட்களை சினிமா படப்பிடிப்பை தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவதை தவிர்த்து விடுவேன்.’’

இவ்வாறு தமன்னா கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘காதல்’ என்றதும் கடுப்பான நாயகி!
தமிழ், தெலுங்கு என 2 மொழி படங்களிலும் பிரபல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர், தமன்னா.
2. ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க விரும்பும் தமன்னா
நடிகர்-நடிகைகள் வாழ்க்கை படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. ஏற்கனவே சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து வித்யாபாலன் நடிப்பில் வெளியான ‘தி டர்டி பிக்சர்’ இந்தி படம் நல்ல வசூல் பார்த்தது.
3. நடிக்க வராவிட்டால், டாக்டர்!
தென்னிந்திய திரையுலகில் உள்ள முக்கிய கதாநாயகிகளில் ஒருவர், தமன்னா. இவர் ஏறக்குறைய எல்லா பிரபல கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார்.
4. “படங்கள் ரசிகர்களை அழவைக்க கூடாது” நடிகை தமன்னா பேட்டி
தமன்னா நடித்த ‘தேவி-2’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. மேலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார்.
5. டாப்சி நடித்த வேடத்தில், தமன்னா!
டாப்சி கதாநாயகியாக நடித்த வேடத்தில், தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.