சினிமா செய்திகள்

ஹிருத்திக் ரோ‌ஷனை விளாசிய கங்கனா ரணாவத் + "||" + Kangana Ranawat Attacked Hrithik Roshan

ஹிருத்திக் ரோ‌ஷனை விளாசிய கங்கனா ரணாவத்

ஹிருத்திக் ரோ‌ஷனை விளாசிய கங்கனா ரணாவத்
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நடிகை கங்கனா ரணாவத் நடிகர் ஹிருத்திக் ரோ‌ஷனை தாக்கி பேசினார்.
தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கங்கனா ரணாவத். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் குயின் படத்தை இயக்கிய பிரபல இந்தி டைரக்டர் விகாஸ் பாஹல் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார். படப்பிடிப்புக்கு செல்லும்போதெல்லாம் கட்டிப்பிடித்து முகத்தை கழுத்தில் அழுத்தி எனது கூந்தல் வாசனையை முகர்ந்து பார்ப்பார் என்றும், உனது வாசனை எனக்கு பிடிக்கிறது என்று கூறுவார் என்றும் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கங்கனா ரணாவத் மேலும் கூறியிருப்பதாவது:–

‘‘எனக்கு இயக்குனர் விகாஸ் பாஹல் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று நான் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான். சினிமா துறையில் பெண்களிடம் நேர்மையாக நடந்து கொள்ளும் ஆண்கள் குறைவாகவே உள்ளனர். நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறையில் இருக்கும் பெண்கள் தொடர்ந்து பாலியல் தொல்லைகளை சந்திக்கிறார்கள்.

செக்ஸ் கொடுமையோடு பெண்களை தாக்கவும் செய்கின்றனர். இப்படிபட்ட ஆண்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மனைவிமார்களை கோப்பைகள் போல் வீட்டில் வைத்துவிட்டு இளம் பெண்களை எஜமானிபோல் நடத்தும் ஆண்களையும் தண்டிக்க வேண்டும். நான் நடிகர் ஹிருத்திக் ரோ‌ஷனைத்தான் சொல்கிறேன். ஹிருத்திக் ரோ‌ஷனுடன் யாரும் பணியாற்றக்கூடாது.’’

இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.