சினிமா செய்திகள்

விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள்- எஸ்.ஏ.சந்திரசேகர் + "||" + Some are scared of seeing Vijay coming into politics -SA- chandrasekar

விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள்- எஸ்.ஏ.சந்திரசேகர்

விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள்- எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.
நெல்லை,

நெல்லை, பாபநாசம் தாமிரபரணி புஷ்கர விழாவில் நீராடிய எஸ்.ஏ.சந்திரசேகர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

''இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியர்கள். இந்தியர்கள் என்றால் இந்துக்கள். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புஷ்கரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீராடினேன். அனைவரும் சந்தோஷமாக இருப்பதற்கு சந்தோஷத்தை நீட்டிக்கச் செய்வதற்கும் ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும். இளைஞர்கள் தங்கள் மனதைக் கட்டுப்படுத்தி ஆன்மிகத்தில் ஈடுபட்டால் வாழ்க்கையில் கண்டிப்பாக முன்னேறலாம்.

இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் அரசியலில் ஈடுபடலாம். மருத்துவர்கள், ஆசிரியர்கள், சாதாரண தொழிலாளி உள்ளிட்டவர்கள் அரசியலுக்கு வரலாம் என்ற போது நடிகர் அரசியலில் வருவதில் மட்டும் சிலருக்கு ஏன் கோபம் வருகிறது. விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள்.

விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் விரும்புகிறேன். விஜய் அரசியல் வருவது ஒருபுறம் இருக்கட்டும். அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்ற செய்தி வரும் போது சிலர் கோபம் கொண்டு எதிர்ப்பது ஏன். தமிழ் ரசிகர்களால் வளர்ந்தவர் விஜய். அந்தத் தமிழர்களுக்கு அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்பது ஒரு தமிழனாகிய எனது விருப்பம்.

தமிழ்நாட்டில் ஊழலற்ற சேவை மனப்பான்மையுடன் கூடிய ஒரு தலைவர் வர வேண்டும் என்பது எனது விருப்பம். தமிழ்நாட்டில் சூழ்நிலை உள்ளதா என்று கேட்டால் பொதுமக்களின் கருத்து என்னவோ அதுவேதான் எனது கருத்தும்’’ என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. பாதிப்பு என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் -ரஜினிகாந்த்
பாதிப்பு என்றால் மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
2. நல்ல மனிதரை திருமணம் செய்துகொண்டால் பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான் -நடிகை அனுஷ்கா
நல்ல மனிதரை திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான் என நடிகை அனுஷ்கா பதிவிட்டுள்ளார்.
3. 5 மாநில தேர்தல் முடிவுகள் : பாரதீய ஜனதா தனது செல்வாக்கை இழந்துள்ளது-நடிகர் ரஜினிகாந்த்
5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாரதீய ஜனதா தனது செல்வாக்கு இழந்ததை காட்டுகிறது என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
4. கர்ப்பம் குறித்த வதந்தி ; நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் - அனுஷ்கா சர்மா கோபம்
கர்ப்பம் குறித்த வதந்திக்கு நடிகை அனுஷ்கா சர்மா கோபமாக பதில் அளித்து உள்ளார்.
5. பிரபல நடிகை படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார்?
பிரபல மலையாள நடிகை படப்பிடிப்பின் போது விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.