சினிமா செய்திகள்

‘மீ டூ’வினால் அப்பாவி ஆண்கள் பாதிக்க கூடாதுநடிகை பூஜாபட் சொல்கிறார் + "||" + Innocent men should not be affected Actress Pooja Bhatt says

‘மீ டூ’வினால் அப்பாவி ஆண்கள் பாதிக்க கூடாதுநடிகை பூஜாபட் சொல்கிறார்

‘மீ டூ’வினால் அப்பாவி ஆண்கள் பாதிக்க கூடாதுநடிகை பூஜாபட் சொல்கிறார்
மீ டூ வில் ஆண்களின் பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் பதிவு செய்து பரபரப்பு ஏற்படுத்துகிறார்கள். இதனால் அப்பாவி ஆண்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று பிரபல இந்தி நடிகை பூஜா பட் கூறினார்.
பிரபல இந்தி நடிகை பூஜா பட் அளித்துள்ள பேட்டி வருமாறு:–

‘‘பெரும்பாலான பெண்கள் பாலியல் கொடுமைகளை பேச ஆரம்பித்து உள்ளனர். நானும் ஒரு காலத்தில் சினிமாவில் நடித்தபோது மதுவுக்கு அடிமையான ஒருவனுடன் தொடர்பில் இருந்தேன். அவன் உடல் ரீதியாக எனக்கு மிகவும் தொல்லை கொடுத்தான். ஆனாலும் நான் பயப்படவில்லை. 

மீ டூ போராட்டம் ஒரு பக்கம் நல்லதுதான். நானும் ஆதரிக்கிறேன். பெண்கள் தங்கள் பிரச்சினைகளை இதில் சொல்ல முடிகிறது. ஆனால் ஆணாக பிறப்பதே குற்றம் என்ற உணர்வோடு செயல்படுவது சரியல்ல. பாலியல் பிரச்சினையில் ஆண்களும் பெண்களும் சமம்தான். ஆண்கள் மட்டும் கெட்டவர்கள் என்று சொல்லி விடமுடியாது. 

சில நேரம் அவர்கள் கூட எந்த தவறும் செய்யாமல் அநியாயமாக பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கிறது. நீதிமன்றங்களிலும் அவர்களுக்கு நீதி கிடைக்காத நிலைமைகளும் உள்ளன. அப்படி நடக்கும்போது அவர்கள் குடும்பங்களின் நிலைமை என்னவாகும் என்பதை நினைத்து பார்க்க  வேண்டாமா? அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படக் கூடாது. பெண்களும் சில சமயங்களில் அவர்கள் தேவைக்காக தவறுகள் செய்கிறார்கள். பாலியல் தொல்லைகள் எல்லா இடங்களிலும் இருக்கிறது.’’

இவ்வாறு அவர் கூறினார்.