சினிமா செய்திகள்

சினிமா கேள்வி-பதில்! : குருவியார் + "||" + Cinema Question-Answer! : Kuruviyar

சினிமா கேள்வி-பதில்! : குருவியார்

சினிமா கேள்வி-பதில்! : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007.
குருவியாரே, ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் டைரக்‌ஷனில், ‘எந்திரன்’ படத்தின் மூன்றாம் பாகம் தயாராகுமா? (பி.விஜய், சென்னை-1)

இப்போது தயாராகி வரும் 2-ம் பாகத்தின் வெற்றியை பொருத்து, மூன்றாம் பாகம் தயாரிப்பு அமையும்!

***

குருவியாரே, சாயிஷா தனது பிறந்தநாளையொட்டி நடிகர்- நடிகைகளுக்கு மது விருந்து கொடுத்தாராமே..? அந்த துணிச்சல் எப்படி வந்தது? (வி.தட்சிணாமூர்த்தி, சேலம்)

சாயிஷா, மும்பையில் பிறந்து வளர்ந்தவர். மும்பை நடிகர்-நடிகைகளுக்கு மது விருந்து ரொம்ப சாதாரணம். அதற்கு துணிச்சல் தேவையில்லை!

***

கீர்த்தி சுரேஷ் யாருடைய ரசிகை? (ஆர்.மதன்குமார், புதுச்சேரி)

கீர்த்தி சுரேஷ் தன்னை ‘விஜய் ரசிகை’ என்று இப்போது சொல்லிக் கொள்கிறார். எப்போதும் சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

***

விஷால் கதாநாயகனாக அறிமுகமான ‘செல்லமே’ படத்தை தயாரித்தது யார்? இப்போது அந்த தயாரிப்பாளர் படம் தயாரிக்கிறாரா? (கே.ஜவகர், விளாத்திகுளம்)

அந்த படத்தை ஞானவேல், ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் தயாரித்தார்கள். இப்போது அந்த இருவருமே நடிகர்களாக மாறி விட்டார்கள்!

***

தனுஷ் நடித்த படங்களில் மிக அதிக வசூல் செய்து அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் எது? (ஜே.ராஜேஷ், புதுக்கோட்டை)

‘வேலையில்லா பட்டதாரி.’ சமீபகால தனுஷ் படங்களில் மிக அதிக நாட்கள் ஓடி வசூல் சாதனை செய்த படம், இதுதான். இதையடுத்து அவர் நடித்து அதிக வசூல் செய்த படம், மாரி!

***

‘வட சென்னை’ படம் ஐஸ்வர்யா ராஜேசுக்கு மேலும் புகழ் சேர்க்குமா? (வெ.தமிழ்துரை, பேராவூரணி)

மிகப்பெரிய அளவில் புகழ் சேர்க்கும். இந்த நம்பிக்கையில்தான் ‘வட சென்னை’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருக்கிறாராம்!

***

நயன்தாரா நடித்து வெளிவந்த ‘கோலமாவு கோகிலா,’ வெற்றி படமா, தோல்வி படமா? (மா.அரவிந்த், வேலூர்)

‘கோலமாவு கோகிலா’ படத்தை வாங்கி திரையிட்ட வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதால், அது வெற்றி படமே. அந்த படத்தின் வெற்றிதான் ஒரு புதிய படத்தில் நயன்தாராவை 2 வேடங்களில் நடிக்க வைத்து இருக்கிறது!

***

குருவியாரே, சமீபத்தில் ஆர்யா வீட்டில் பிரியாணி விருந்து சாப்பிட்ட நாயகி யார்? (டி.மணி கடலூர்) 

சமீபத்தில் ஆர்யா வீட்டில் பிரியாணி விருந்து சாப்பிட்டவர், சாயிஷா!

***

குருவியாரே, சிலம்பாட்டத்தை முறைப்படி கற்றுக்கொண்ட கதாநாயகிகள் யார்-யார்? சிலம்பாட்ட போட்டி வைத்தால் அதில் கலந்து கொள்வார்களா? (ஜி.மனோஜ், கிருஷ்ணகிரி)

தன்சிகா, சமந்தா ஆகிய இரண்டு பேரும் சிலம்பாட்டத்தை முறைப்படி கற்றுக் கொண்டவர்கள்! இருவரும் கற்றுக்கொண்ட சிலம்பாட்ட கலையை படங்களில் மட்டுமே பயன்படுத்துவார்களாம்!

***

மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் நடித்து மிக அதிக நாட்கள் ஓடி வசூல் சாதனை செய்த படம் எது? (வி.சாருலதா, சிவகாசி)

ஜெமினி கணேசன் நடித்த கல்யாண பரிசு, பணமா பாசமா ஆகிய 2 படங்களும் அதிகநாட்கள் ஓடி, மிகப்பெரிய வசூல் சாதனை செய்தன!

***

குருவியாரே, சமீபகாலத்தில் அறிமுகமான கதாநாயகிகளில், இரக்க சுபாவம் மிகுந்தவர் யார்? (ஆர்.கோபால், காட்பாடி)

ஹன்சிகா! ஆதரவற்ற 31 குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பவர், இவர்தான்!

***

கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சோனியா அகர்வால் ஒரு படத்தில் வில்லியாக நடிக்கிறாராமே...வில்லி வேடம் அவருக்கு பொருந்துமா? (எஸ்.ஆனந்த், பெங்களூரு)

சோனியா அகர்வால் வில்லி வேடத்தில் அபாரமாக நடித்து இருப்பதாக படக்குழுவினர் கூறுகிறார்கள். அவர்களின் பாராட்டுகளை கேட்டபின், சோனியா அகர்வால் மிரட்டலாக நடித்து வருகிறாராம்!

***

குருவியாரே, அஞ்சலி இப்போது யாரை காதலிக்கிறார்? (கு.சின்னச்சாமி, அவினாசி)

“யாரையும் காதலிக்கிற நிலையில் நான் இல்லை” என்கிறார், அஞ்சலி!

***

வாணிஸ்ரீ, ராஜஸ்ரீ, சி.ஐ.டி. சகுந்தலா ஆகிய மூன்று பேர்களை பற்றி தகவல் இருக்கிறதா? (வி.சுப்பிரமணியம், பி.கொமாரபாளையம்)

மூன்று பேருமே நடித்து முடித்து இப்போது ஓய்வு எடுத்து வருகிறார்கள்!

***

குருவியாரே, ‘மார்க்கெட்’ இழந்த நடிகைகள்தான் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட சம்மதிப்பார்கள். ஆனால், முன்னணி கதாநாயகியான தமன்னா ஒரு தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட சம்மதித்து இருக்கிறாராமே? (சி.கென் னடி, அடைக்கலாபுரம்)

“நட்புக்காகவே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட சம்மதித்தேன்” என்கிறார், தமன்னா!

***

‘மோகினி’ படம் திரிஷாவுக்கு கைகொடுத்ததா? (ஆர்.அறிவொளி, பெரம்பலூர்)

கைகொடுக்கவில்லை. அந்த படத்தில் கிடைக்காத வெற்றியும், புகழும் ‘96’ படத்தில் கிடைத்து இருக்கிறது” என்கிறார், திரிஷா!

***

குருவியாரே, நடிகை கஸ்தூரி அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால், எந்த கட்சியில் சேருவார்? (எஸ்.ஏ.தங்கப்பன், வள்ளியூர்)

இதுபற்றி கஸ்தூரி தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல்!

***

தமிழ் பட உலகில் இருந்து இந்தி பட உலகுக்கு சென்ற டாப்சி, இப்போது எந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்? (வி.சசி, காஞ்சிபுரம்)

‘கேம் ஓவர்’ என்ற தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்!

***

அர்ஜுன் அடுத்து இயக்கும் படம் எது? அந்த படத்தில் அவர் நடிப்பாரா? (வி.குருசம்பத், நெய்வேலி)

அர்ஜுன் அடுத்து ஒரு புதிய தமிழ் படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அந்த படத்தில் நடிப்பதற்காக தனது உடற்கட்டை மாற்றி அமைத்து, தயாராகி வருகிறார்!

***

தொடர்புடைய செய்திகள்

1. சினிமா கேள்வி பதில் ! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை–600007
2. சினிமா கேள்வி பதில்! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை&600007
3. சினிமா கேள்வி-பதில் : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை–600007
4. சினிமா கேள்வி பதில் ! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
5. சினிமா கேள்வி-பதில்! : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007