சினிமா செய்திகள்

நடிகைகளை பாதுகாக்க கன்னட சினிமாவில் குழு + "||" + Protect the actresses Group of Kannada films

நடிகைகளை பாதுகாக்க கன்னட சினிமாவில் குழு

நடிகைகளை பாதுகாக்க கன்னட சினிமாவில் குழு
நடிகைகளை பாதுகாக்க கன்னட சினிமாவில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ‘மீ டூ’ இயக்கம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் பாலியல் தொல்லைகளை நடிகைகள் இதில் பகிர்ந்து வருகிறார்கள். இந்தி நடிகர் நானா படேகரின் பாலியல் தொல்லையை தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்த தனுஸ்ரீதத்தா அம்பலப்படுத்தினார்.


நடிகை கங்கனா ரணாவத் ‘குயின்’ பட இயக்குனர் மீது செக்ஸ் புகார் சொன்னார். பிரபல இயக்குனர் சஜீத்கான் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சொல்லப்பட்டு உள்ளது. இதனால் அவர் இயக்குவதாக இருந்த ஹவுஸ்புல்-4 படத்தில் இருந்து அக்‌ஷய்குமார் விலகி விட்டார். ‘மீ டூ’ புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் கன்னட சினிமாவிலும் உரிமை மற்றும் சமத்துவத்துக்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பில் நடிகைகள் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க குழு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் சேதன் குமார், நடிகைகள் பிரியங்கா உபேந்திரா, சுருதி ஹரிகரன், இயக்குனர் கவிதா லங்கேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

30-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள் இந்த குழுவுக்கு ஆதரவு தெரிவித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் கொடுத்து உள்ளனர். பாலியல் தொல்லைகள் குறித்தும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் குறித்தும் இந்த குழு விசாரிக்கும் என்று நடிகர் சேதன் குமார் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மீட்பு பணிகள் குறித்து ஆலோசனை: புயல் பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் நேரில் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு மையங்களில் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மீட்பு பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
2. ரனில் விக்ரமசிங்கேயின் பாதுகாப்பு வாபஸ் - சிறிசேனா நடவடிக்கை
ரனில் விக்ரமசிங்கேயின் பாதுகாப்பு படைகளை வாபஸ் பெற்று அதிபர் சிறிசேனா நடவடிக்கை எடுத்துள்ளார்.
3. வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி 23-ந் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் - விக்கிரமராஜா
வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி வருகிற 23-ந் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று வேலூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
4. ஜெயினர் கோவில்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் - போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
தமிழகம் முழுவதும் உள்ள ஜெயினர் கோவில்களில் பாதுகாப்புகளை பலப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொண்டார்.
5. சென்னிமலையில் குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னிமலையில் குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றம், மக்கள் மன்றம் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.