சினிமா செய்திகள்

சுசிலீக்ஸ் வீடியோ உண்மை இல்லை -சின்மயி + "||" + susileeks Video is not true - Chinmayi

சுசிலீக்ஸ் வீடியோ உண்மை இல்லை -சின்மயி

சுசிலீக்ஸ் வீடியோ உண்மை இல்லை -சின்மயி
தன்னை பற்றி பாடகி சுசித்ரா கூறியதில் உண்மை இல்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
சென்னை

பாலிவுட்டில் மீடூ இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில்  கவிஞர்  வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார் பாடகி சின்மயி. அவர் ஆதாரம் இல்லாமல் விளம்பரம் தேட பொய் புகார் தெரிவிப்பதாக சிலர் விமர்சித்தனர்.

சமூக வலைத்தளத்தில்  பாடகி சுசித்ரா சுசி லீக்ஸின் ஒரு பகுதியாக சின்மயி குறித்து தெரிவித்ததை தேடிக் கண்டுபிடித்தனர்.

2016-ம் ஆண்டில் பாடகி சின்மயி 4 முறை கருவை கலைத்ததாக சுசித்ரா டுவீட்டி இருந்தார். சின்மயி அட்ஜெஸ்ட் செய்து வாய்ப்புகள் பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். சின்மயி குறித்து சுசித்ராவின் டுவீட்டுகள் மற்றும் வீடியோவை தேடிக் கண்டுபிடித்த சமூகவலைதளவாசிகள்  முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்டனர்.

நெட்டிசன்கள் தன்னை தொடர்ந்து கேவலமாக விமர்சித்ததை பார்த்த சின்மயி சுசிலீக்ஸ் பற்றிய உண்மையை தெரிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவு செய்து பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் 4 முறை கருகலைப்பு எல்லாம் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் சின்மயி.

சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னை பற்றி தவறாக பேசினார். அதில் உண்மை இல்லை. அதற்காக அவர் இமெயில் மூலம் மன்னிப்பு கேட்டார். அந்த இமெயிலை பப்ளிக்காக வெளியிட வேண்டும் என்று தோன்றவில்லை. இன்று சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் ஒரு டுவீட்டுக்கு பதில் அளித்துள்ளார். சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லாதபோது அவர் சின்மயி மீது புகார் தெரிவித்தார் என்று கார்த்திக் டுவீட்டியுள்ளார் என்கிறார் சின்மயி.

தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் சர்ச்சையில் சிக்கிய சின்மயிக்கு வந்த சோதனை - அவரே வெளியிட்ட தகவல்
பாலியல் சர்ச்சையில் சிக்கிய சின்மயிக்கு வந்த தகவலை, அவரே தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
2. ஆடையை விமர்சித்து ‘மீம்ஸ்’ போட்டவர்களுக்கு சின்மயி பதிலடி
ஆடையை விமர்சித்து ‘மீம்ஸ்’ போட்டவர்களுக்கு சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.
3. மீடூ விவகாரத்தில் சின்மயிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு
மீடூ விவகாரத்தில் சின்மயிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.