சினிமா செய்திகள்

சினிமாவில் பலாத்காரம் இல்லை: “பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன்தான் நடக்கிறது” - நடிகை ஷில்பா ஷிண்டே + "||" + At the cinema no rape: "Sexual incidents happen only with consent" - actress Shilpa Shinde

சினிமாவில் பலாத்காரம் இல்லை: “பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன்தான் நடக்கிறது” - நடிகை ஷில்பா ஷிண்டே

சினிமாவில் பலாத்காரம் இல்லை: “பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன்தான் நடக்கிறது” - நடிகை ஷில்பா ஷிண்டே
பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன்தான் நடக்கிறது நடிகை ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகை ஷில்பா ஷிண்டே சினிமாவில் பலாத்காரம் இல்லை என்றும், சம்மதத்துடன்தான் எல்லாம் நடக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“மீ டூவில் பாலியல் பற்றி பேசுவது அபத்தமாக உள்ளது. பாலியல் தொல்லையில் சிக்கினால் அப்போதே சொல்ல வேண்டும். பல ஆண்டுகள் கழித்து தாமதமாக குரல் கொடுத்தால் யாரும் கேட்கப்போவது இல்லை. எல்லா இடங்களிலும் பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. ஆனால் சினிமா துறையின் பெயரை கெடுப்பதுபோல் பேசுகிறார்கள்.


சினிமா துறை மோசமானது அல்ல. நல்ல துறைதான். சினிமா துறையில் இருக்கும் எல்லோரும் மோசமானவர்கள் இல்லை. இங்கு நடப்பது கொடுத்து வாங்குவது. யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. சினிமாவில் பாலியல் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எல்லாமே இருதரப்பினரின் சம்மதத்துடன்தான் நடக்கிறது.

உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விலகிவிட வேண்டும். அதை விட்டு புகார் தெரிவிப்பது முறையல்ல.” என்று ஷில்பா ஷிண்டே கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு
சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு அமைக்கப்பட உள்ளது.
2. மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடலுக்கு அமைச்சர்கள்- நடிகர்கள் அஞ்சலி
மரணம் அடைந்த முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ரித்தீசின் உடலுக்கு அமைச்சர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
3. ‘‘நட்புக்காக வாக்கு சேகரிக்கிறேன்’’ மதுரையில், நடிகர் சமுத்திரகனி பேச்சு
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவாக நடிகர் சமுத்திரகனி நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கட்சிக்கும், கூட்டணிக்கும் அப்பாற்பட்டு நட்புக்காக வாக்கு கேட்கிறேன், என்றார்.
4. கோவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை: குற்றவாளிகளை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைப்பு
கோவை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுவரை 100 பேரிடம் விசாரணை நடத்தியும் துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
5. கொத்தமங்கலத்தில் 1000 அடி ஆழத்தில் ஆழ்குழாய் அமைத்தும் குடிநீர் இல்லை பொதுமக்கள் புலம்பல்
கொத்தமங்கலத்தில் குடிநீருக்காக 1000 அடி ஆழத்தில் ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.