சினிமா செய்திகள்

மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் - டைரக்டர் மீது நடிகை போலீசில் புகார் + "||" + Intimidated to bed - Actress on the director complains to the police

மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் - டைரக்டர் மீது நடிகை போலீசில் புகார்

மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் - டைரக்டர் மீது நடிகை போலீசில் புகார்
மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் என, டைரக்டர் மீது நடிகை ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்தி பட உலகில் பிரபல டைரக்டராக இருக்கும் சுபாஷ் கை போதை பொருள் கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் கூறி இருந்தார். இப்போது நடிகையும், மாடல் அழகியுமான கேட் சர்மாவும் சுபாஷ் கை பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“என்னை சுபாஷ் கை அவரது வீட்டுக்கு அழைத்தார். நான் அங்கு சென்றபோது 5, 6 பேர் இருந்தனர். அவர்கள் முன்னால் தனக்கு மசாஜ் செய்துவிடும்படி கூறினார். நானும் பெரிய டைரக்டர் என்பதால் மறுக்கவில்லை. சில நிமிடங்கள் அவருக்கு மசாஜ் செய்துவிட்டு கை கழுவுவதற்காக பாத்ரூம் சென்றேன்.

என் பின்னாலேயே சுபாஷ் கையும் வந்துவிட்டார். உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும் என்று சொல்லி எனது கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவரது அறைக்கு சென்றார். அங்கு என்னை கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்க முயன்றார். நான் அவர் பிடியில் இருந்து விடுபட்டு கிளம்ப தயாரானேன். உடனே இன்று இரவு என்னுடன் தங்காவிட்டால் படத்தில் அறிமுகம் செய்ய மாட்டேன் என்று மிரட்டினார்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் அட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடா? - மத்திய அரசு விளக்கம்
தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில், அட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடு உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
2. காதலில் விழுந்த ஐஸ்வர்யா தத்தா
நடிகை ஐஸ்வர்யா தத்தா காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. வன்முறையுடன் இந்துக்களை தொடர்புபடுத்தி பேசிய சீதாராம் யெச்சூரி மீது போலீசில் புகார்
வன்முறையுடன் இந்துக்களை தொடர்புபடுத்தி பேசிய சீதாராம் யெச்சூரி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
4. டைரக்டராகும் நடிகர் விவேக்
நடிகர் விவேக் டைரக்டராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
5. டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மதஉணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என போலீசில் புகார்
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மதஉணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.