சினிமா செய்திகள்

‘மீ டூ’வில் சிக்கிய நடிகர் அமிதாப்பச்சன் + "||" + Actor Amitabh Bachchan caught in 'Me Too'

‘மீ டூ’வில் சிக்கிய நடிகர் அமிதாப்பச்சன்

‘மீ டூ’வில் சிக்கிய நடிகர் அமிதாப்பச்சன்
‘மீ டூ’வில் நடிகர் அமிதாப்பச்சன் சிக்கினார்.
மீ டூ இயக்கம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. புகழ்பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் புகாரில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பலர் தங்கள் பெயர்களும் மீ டூ வில் வெளியாகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ‘மீ டூ’வில் சிக்கி உள்ளார்.


இந்தி திரையுலகில் புகழ்பெற்ற சிகை அலங்கார நிபுணராக இருக்கும் சப்னா மோடி பவனானி தனது டுவிட்டரில் அமிதாப்பச்சன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

“நீங்கள் நடித்த பிங்கி படம் வெளியாகி உங்களுக்கு நல்ல பெயர் பெற்று தந்து இருக்கலாம். ஆனால் உங்களுடைய நல்ல பெயர் விரைவில் கெடப்போகிறது. உங்களுடைய சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். உண்மை கண்டிப்பாக வெளியே வரத்தான் செய்யும். இப்போது நீங்கள் உங்களது கையை கடிக்க தொடங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அமிதாப்பச்சனின் பாலியல் தொல்லைகள் குறித்து பல பெண்கள் கூறியதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் வெளியே வந்து உண்மையை சொல்ல வேண்டும்.”

இவ்வாறு சப்னா மோடி பவனானி கூறியுள்ளார்.

அமிதாப்பச்சன் இரு தினங்களுக்கு முன்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை கண்டித்தும், மீ டூ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்த நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. ‘மீ டூ’ பிரச்சினை: ஆணாதிக்கம் தளர்கிறதா?
இன்றைய தேதியில் ‘மீ டூ’ பற்றி திரும்பிய இடமெல்லாம் பேசப்படும் விஷயமாக, சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கும் விஷயமாக, இன்னும் குறிப்பாக திரைத்துறையை மெல்ல விழுங்கும் விஷ(ய)மாக மாறியிருக்கிறது.
2. ‘மீ டூ’-வில் கருத்து தெரிவிப்பது அவப்பெயரை ஏற்படுத்தும் - மந்திரி ஜெயமாலா
‘மீ டூ’-வில் கருத்து தெரிவிப்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்று மந்திரி ஜெயமாலா கருத்து தெரிவித்து உள்ளார்.
3. நான் போதை அடிமை அல்ல, லெஸ்பியனும் அல்ல : ராக்கி சாவந்த்துக்கு தனுஸ்ரீ தத்தா பதிலடி
நான் போதை அடிமை அல்ல, லெஸ்பியனும் அல்ல என கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு நடிகை தனுஸ்ரீ தத்தா பதிலடி கொடுத்துள்ளார்.
4. தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு நடிகர் அர்ஜூன் வழக்கு
தனக்கு எதிராக பாலியல் புகார் கூறிய சுருதி ஹரிகரனுக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து உள்ளார்.
5. தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக ரூ. 50 கோடி கேட்டு அவதூறு வழக்கு : ராக்கி சாவந்த் மிரட்டல்
தன்னை தரம் குறைந்த வகுப்பு பெண் என விமர்சித்த தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக ரூ.50 கோடிக்கு கேட்டு வழக்கு தொடரப் போவதாக ராக்கி சாவந்த் மிரட்டல் விடுத்து உள்ளார்.