சினிமா செய்திகள்

சின்மயி பாலியல் குற்றச்சாட்டு : மன்னிப்பு கேட்ட நகைச்சுவை நடிகர் + "||" + Chinmayi sexual charge: apology Comedian

சின்மயி பாலியல் குற்றச்சாட்டு : மன்னிப்பு கேட்ட நகைச்சுவை நடிகர்

சின்மயி பாலியல் குற்றச்சாட்டு : மன்னிப்பு கேட்ட நகைச்சுவை நடிகர்
தமிழில் என்றென்றும் புன்னகை, ராஜா ராணி, 10 எண்றதுக்குள்ள, தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கர், செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளவர் டி.எம்.கார்த்திக்.
டி.எம்.கார்த்திக் மீது பாலியல் புகார் சொல்லப்பட்டது. அதை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்து இருந்தார்.

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாலியல் புகாருக்கு ஆளான டி.எம்.கார்த்திக் டுவிட்டரில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:–


‘‘நான் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக மீ டூ வில் புகார்கள் வந்துள்ளன. பெண்களிடம் நான் மரியாதையாகவே நடந்து இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் விருப்பத்துடன்தான் இருந்தனர் என்று நான் நினைத்தது தவறு என்பதை உணர்கிறேன். சில நேரங்களில் நான் அத்துமீறி இருக்கலாம்.

ஆனாலும் எந்த பெண்ணுக்கும் தொல்லை கொடுக்க நினைத்தது இல்லை. எனது சந்திப்பை அசவுகரியமாக கருதும் பெண்களை விட்டு நான் விலகி விடுவது உண்டு. என்னால் எந்த பெண்ணுக்காவது சங்கடம் நேர்ந்து இருந்தால் அதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மீ டூ இயக்கம் என்னை சுயபரிசோதனை செய்துகொள்ள உதவி இருக்கிறது. சில பெண்கள் அசவுகரியத்தை வெளிப்படுத்தாமல் என்னை சகித்துக்கொண்டு உள்ளனர் என்பதை இப்போது உணர்கிறேன். எனது தவறுகளுக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்.’’

இவ்வாறு கார்த்திக் கூறியுள்ளார்.