சினிமா செய்திகள்

டுவிட்டரில் அவதூறு : நடிகை கஸ்தூரி ஆவேசம் + "||" + Twitter defamation: actress kasthuri angry

டுவிட்டரில் அவதூறு : நடிகை கஸ்தூரி ஆவேசம்

டுவிட்டரில் அவதூறு : நடிகை கஸ்தூரி ஆவேசம்
நடிகை கஸ்தூரி சமூக, அரசியல் சம்பந்தமான வி‌ஷயங்களை டுவிட்டரில் துணிச்சலாக பேசி எப்போதும் பரபரப்பாக இருக்கிறார். இதனால் அவருக்கு விமர்சனங்களும் வருகின்றன.
கஸ்தூரி அதற்கும் பதிலடி கொடுத்து வருகிறார். கஸ்தூரியை ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அணுகி தங்கள் கட்சியில் இணையுமாறு வற்புறுத்தியதாக தகவல் கசிந்தது.

இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த கஸ்தூரி, ‘‘என்னை அவர்கள் அணுகியது உண்மைதான். ஆனால் இப்போது எந்த கட்சியிலும் சேரமாட்டேன்’’ என்றார். இந்த நிலையில் ரஜினிகாந்த் படத்தை டுவிட்டர் முகப்பில் வைத்துள்ள ஒருவர் கஸ்தூரி தன்னை ஓட்டல் அறைக்கு அழைத்து தொடும்படி சொன்னதாகவும் நான் மறுத்து விட்டேன் என்றும் பதிவிட்டு இருந்தார்.


இது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். ரஜினிகாந்த் ரசிகர்களும் கண்டித்ததுடன், அந்த நபர் ரஜினி ரசிகராக இருக்க முடியாது என்றனர். இன்னும் சிலர் ரஜினிகாந்த் தலையிட்டு அவர் மீது நடவடிக்கை எடுத்து ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பதிவிட்டனர்.

அந்த நபருக்கு கஸ்தூரி டுவிட்டரில் பதிலடி கொடுத்தார். அவர் கூறும்போது, ‘‘அட பொய் சொல்லும்போது கூட உண்மையை உளறிட்டான் பாருங்க. அவனால் முடியாதுதான். முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆக வேண்டும். ரஜினி பெயரை கெடுக்க இந்த மாதிரி எத்தனைபேர் அலைகிறார்களோ’’ என்றார்.