சினிமா செய்திகள்

"சர்கார்" படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச் + "||" + Teaser release of "Sarkar"

"சர்கார்" படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்

"சர்கார்" படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்
"சர்கார்" படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
சென்னை,

ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு மற்றும் வரலட்சுமி உட்பட பலரும் நடித்துள்ள சர்கார் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் சர்கார் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. 

 இணையதளத்தையே கிடுகிடுக்க வைத்துக் கொண்டுள்ளது 1.33 நிமிடம் ஓடக் கூடிய சர்கார் டீசர். விஜய், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அடங்கிய டீசரில் விஜய்யின் அசத்தல் வசனம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

ஐ எம் ஏ கார்ப்பரேட் கிரிமினல் என்று விஜய் பேசும் வசனம் பிரபலமாகியுள்ளது. அந்த கெட்டப்பும் பிரபலமாகியுள்ளது. ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” என விஜய் அரசியல் வசனம் பேசியது ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 

 டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே 10 லட்சம் பேர் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.