சினிமா செய்திகள்

புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி + "||" + In the new look, Vijay Sethupathi

புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி

புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி
புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக வருகிறார். அவரது திருநங்கை தோற்றம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்போது ‘சீதக்காதி’ படத்தில் அவர் நடிக்கும் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் கையில் வில்லுடன் சரித்திர காலத்து மன்னன் வேடத்தில் இருக்கிறார். இந்த தோற்றத்தையும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி மேலும் பல தோற்றங்களிலும் வருகிறார். ஏற்கனவே இந்த படத்தில் அவர் 60 வயது முதியவராக வரும் தோற்றம் வெளியாகி இருந்தது.

இந்த படத்தை பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். விஜய் சேதுபதிக்கு இது 25-வது படம் ஆகும். இந்த படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். பல தோற்றங்களில் விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி சரித்திர காலத்து உடைகள் அணிந்து நடிக்கும் தோற்றமும் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்தின் பேட்ட படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கிறார். படப்பிடிப்பில் துப்பாக்கியுடன் அவர் நடித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. ஏற்கனவே தாதா, திருடன், டாக்டர், போலீஸ் அதிகாரி உள்பட பல அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதி, தனுஷ் படங்களுக்கு தடை
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. விஜய் சேதுபதியின் புதிய படம் ‘சங்கத்தமிழன்’
விஜய் சேதுபதியின் புதிய படத்துக்கு சங்கத்தமிழன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
3. விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகன்னா-நிவேதா பெத்துராஜ்
விஜய் சேதுபதி ஜோடியாக ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரும் ஜோடிகளாக நடிக்கிறார்கள்.
4. சபரிமலைக்கு பெண்கள் செல்வதை ஆதரித்த விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் நடந்தன.
5. சர்வதேச பிரச்சினைகளை பேசும் விஜய் சேதுபதியின் புதிய படம்
விஜய் சேதுபதி படத்துக்கு படம் வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.