சினிமா செய்திகள்

நான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா? பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி + "||" + Singer Chinmayi retaliated

நான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா? பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி

நான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா? பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகார் விவகாரம் ஆதரவு எதிர்ப்பு என்ற நிலையில் காரசார விவாதமாகி இருக்கிறது.
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகார் விவகாரம் ஆதரவு எதிர்ப்பு என்ற நிலையில் காரசார விவாதமாகி இருக்கிறது. 13 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது பேசுவதா? என்று சிலர் சின்மயியை கண்டித்தனர்.

இந்த நிலையில் ஒருவர் டுவிட்டரில், “தீபாவளிக்கு சின்மயி வெடி என்று ஒன்று வந்துள்ளதாம். இப்போது பற்ற வைத்தால் பதினைந்து வருடத்துக்கு அப்புறம்தான் வெடிக்குமாம்” என்று கேலி செய்து ஒரு பதிவை வெளியிட்டார்.

இது சின்மயிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவருக்கு தனது டுவிட்டரில், “எரிமலை பல வருஷம் கொந்தளிச்சிட்டே இருக்குமாம். ஆனால் வெடிச்சா சர்வ நாசம். மூடிட்டு போ” என்று பதிலடி கொடுத்துள்ளார்.