சினிமா செய்திகள்

நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் + "||" + Sruthi Hariharan accuses Arjun Sarja

நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்

நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்
நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் சீண்டல் புகார் தெரிவித்துள்ளார்.
பெங்களூர்

பாலியல் துன்புறுத்தல், பாலியல் துஷ்பிரயோகம் அல்லது தவறான நடத்தை ஆகியவற்றின் காரணமாக பாலிவுட் பிரபலங்கள் மீது மீ டூ என  தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் முதன்முறையாக மீ டூ விவகாரத்தில் சிக்கியவர் கவிஞர் வைரமுத்து தான். இவர் மீது பாடகி சின்மயி முதன்முறையாக பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டினை சட்டப்பூர்வமாக எதிர்க்கொள்ள தயாராக உள்ளதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இவரைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக், இயக்குநர் சுசி கணேசன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தற்போது நடிகர் அர்ஜூன் மீது புகார்  பாய்ந்துள்ளது. கன்னடத்தில் பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். நடிகர் அர்ஜூன் உடன் 'விஸ்மயா' என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இந்த புகாருக்கு இதுவரை நடிகர் அர்ஜூன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. 2 வருடம் கழித்து ஷேவ் செய்த நடிகர் மாதவன்
நடிக்கும் சினிமாவுக்காக நடிகர் மாதவன் 2 வருடம் கழித்து ஷேவ் செய்துள்ளார்.
2. நடிகர் விஷாலுக்கு அக்டோபர் 9-ந் தேதி திருமணம்
நடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை : ரசிகர்கள் ஏமாற்றம் !
நடிகர் விஷாலின் அயோக்யா வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
4. பெண்களின் பொய்யான செக்ஸ் புகாரில் இருந்து ஆண்களை பாதுகாக்க "மென் டூ" இயக்கம்
ஆண்களுக்கு எதிராக பழி தீர்ப்பதற்காக, பாலியல் குற்ற வழக்குகளை பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக கூறி "மென் டூ" என்ற இயக்கத்தை, சமீபத்தில் பாலியல் குற்றவழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரின் நண்பர்கள் துவங்கியுள்ளனர். #mentoo
5. நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக உதவியாளர் புகார்
நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கியதாக, அவரது உதவியாளர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.