சினிமா செய்திகள்

“சபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு”நடிகர் சிவகுமார் கருத்து + "||" + "In Sabarimala, it is wrong to stop women" Actor Sivakumar commented

“சபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு”நடிகர் சிவகுமார் கருத்து

“சபரிமலையில், பெண்களை தடுப்பது தவறு”நடிகர் சிவகுமார் கருத்து
சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பதா, வேண்டாமா? என்ற பிரச்சினை தொடர்பாக நடிகர் சிவகுமார் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.
சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பதா, வேண்டாமா? என்ற பிரச்சினை தொடர்பாக நடிகர் சிவகுமார் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட, மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சன்னிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாக இருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர்.

பெண்களுடைய உதிர போக்கு, மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை. தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதி மன்றமும் அனுமதி வழங்கி விட்டது. இனியும் பெண்களை சன்னிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு.

விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாக வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.