சபரிமலைக்கு பெண்கள்: நடிகர் சாருஹாசன் எதிர்ப்பு


சபரிமலைக்கு பெண்கள்: நடிகர் சாருஹாசன் எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 Oct 2018 10:45 PM GMT (Updated: 21 Oct 2018 8:56 PM GMT)

நடிகர் சாருஹாசன் சபரி மலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.


சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கொச்சியை சேர்ந்த ரெஹானா பாத்திமாவும் ஆந்திராவை சேர்ந்த டி.வி பெண் நிருபர் கவிதா கோஷியும் போலீஸ் பாதுகாப்புடன் கோவில் சன்னிதானம் வரை சென்றனர்.

அவர்கள் நடை பந்தல் பகுதியில் சென்றபோது பக்தர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். அர்ச்சகர்களும் போராடினார்கள். இதனால் இரண்டு பெண்களையும் போலீசார் திருப்பி அனுப்பினர். கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமாவுக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

ரெஹானா ‘எகா’ என்ற ஓரின சேர்க்கையாளர் படத்தில் ஆபாசமாக நடித்தவர். கேரளாவில் நடந்த முத்த போராட்டத்தில் பங்கேற்றவர். அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிப்பது குறித்து அரசியல் கட்சியினர், நடிகர், நடிகைகள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து கருத்துக்கள் கூறுகிறார்கள்.

நடிகர் சாருஹாசன் சபரி மலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

“ஒரு தவறான சமத்துவம். சபரிமலைக்கு செல்வதில் கேட்கப்படும் சமத்துவம். பெண்கள் ஆண்களின் பொதுக்கழிப்பறையில் உட்காரும் உரிமை கேட்பது போன்றது. ஏன் புகைப்பிடிப்பதிலும் தண்ணி அடிப்பதிலும் சமத்துவம் கேட்பது இல்லை. அதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஆண் விபசார உரிமை கேட்போம்.”

இவ்வாறு சாருஹாசன் ஆவேசமாக கூறியுள்ளார்.

Next Story