சினிமா செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய அர்ஜூனுக்கு கன்னட நடிகர் சங்கம் ஆதரவு + "||" + To Arjun Kannada actor's association is supported

பாலியல் புகாரில் சிக்கிய அர்ஜூனுக்கு கன்னட நடிகர் சங்கம் ஆதரவு

பாலியல் புகாரில் சிக்கிய அர்ஜூனுக்கு கன்னட நடிகர் சங்கம் ஆதரவு
நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறி இருந்தார். இதனை அர்ஜூன் மறுத்தார்.
சுருதி ஹரிகரன் பொய்யான குற்றச்சாட்டு கூறியுள்ளார், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்றார் நடிகர் அர்ஜூன். இந்த நிலையில் கன்னட நடிகர் சங்கம் அர்ஜூனுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. 

சங்கத்தின் பொதுச்செயலாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறும்போது, ‘‘அர்ஜூன் மீது சுருதி ஹரிகரன் புகார் சொன்னதற்கு ஆதாரம் இல்லை. பாலியல் தொல்லை நடந்து இருந்தால் உடனே அவர் வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அந்த படம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தபோதே அதை சொல்லி இருக்கலாமே. அர்ஜூன் சிறந்த நடிகர். கதைக்கு தேவையாக இருந்திருந்தால் மட்டுமே அப்படி செய்து இருப்பார்’’ என்றார்.