சினிமா செய்திகள்

பாலியல் புகார் கூறிய பெண் மீது வழக்கு தொடருவேன் நடிகர் தியாகராஜன் பேட்டி + "||" + I will prosecute a woman who has sexually abused her

பாலியல் புகார் கூறிய பெண் மீது வழக்கு தொடருவேன் நடிகர் தியாகராஜன் பேட்டி

பாலியல் புகார் கூறிய பெண் மீது வழக்கு தொடருவேன் நடிகர் தியாகராஜன் பேட்டி
என் மீது பாலியல் புகார் கூறிய பெண் மீது வழக்கு தொடருவேன் என்று நடிகர் தியாகராஜன் கூறினார்.
சென்னை, 

‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மலையூர் மம்பட்டியான்’, ‘கொம்பேறி மூக்கன்’, ‘நீங்கள் கேட்டவை’ உள்பட பல படங்களில் நடித்துள்ள தியாகராஜன் மீது பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் பாலியல் புகார் கூறினார்.

தியாகராஜன் இயக்கிய ‘பொன்னர் சங்கர்’ படத்தில் பணியாற்றியபோது நள்ளிரவில் நான் தங்கியிருந்த அறை கதவை 3 தடவை தட்டி தொல்லை கொடுத்தார் என்று அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து நடிகர் தியாகராஜன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

என் மீது பாலியல் புகார் கூறிய பெண் ‘பொன்னர் சங்கர்’ படத்தில் 2, 3 நாட்கள் பயிற்சியாளராக வேலை செய்தார். பெரம்பலூரில் நடந்த படப்பிடிப்பில் அவர் பணியாற்றினார். அப்போது துணை நடிகர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பகல், இரவு தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடந்தது. எனக்கு ஓய்வு எடுக்கவே நேரம் இல்லை. ஆனால் அறை கதவை நள்ளிரவில் நான் தட்டியதாக அவர் கூறியுள்ளார். 2, 3 நாட்கள் தான் அந்த பெண் பணி செய்தார். அதன் பிறகு ஜலதோஷம் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். முக்கியமான போர் காட்சிகளை 15 நாட்கள் படம் பிடித்தோம்.

ஓய்வே இல்லாமல் பட வேலைகளில் ஈடுபட்டிருந்த என் மீது பொய்யாக பாலியல் குற்றச்சாட்டு சொல்லி பழி சுமத்தியிருக்கிறார். எனக்கு 50 வருடம் சினிமா துறையில் சம்பாதித்த நல்ல பெயரை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனவே அந்த பெண் மீது மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். ‘மீ டூ’ வை நான் ஆதரிக்கிறேன். ஆனால் இப்படி தவறான புகார் கூறினால் அதன் மீது நம்பிக்கை ஏற்படாது.

இவ்வாறு அவர கூறினார்.

இதைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி கூறும்போது, “சம்மதம் இல்லாமல் எந்த குற்றமும் நடப்பது இல்லை. ‘மீ டூ’ வை தவறாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலை நீடித்தால் ‘பிளாக்மெயில்’ செய்வார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதற்கு முடிவு கட்டவேண்டும்” என்றார். பேட்டியின்போது டைரக்டர்கள் வாராகி, பிரவீன்காந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...