சினிமா செய்திகள்

தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக ரூ. 50 கோடி கேட்டு அவதூறு வழக்கு : ராக்கி சாவந்த் மிரட்டல் + "||" + Tanushree Dutta sues Rakhi Sawant for Rs 10 cr, gets threatened with Rs 50 cr countersuit

தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக ரூ. 50 கோடி கேட்டு அவதூறு வழக்கு : ராக்கி சாவந்த் மிரட்டல்

தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக ரூ. 50 கோடி கேட்டு அவதூறு வழக்கு :  ராக்கி சாவந்த் மிரட்டல்
தன்னை தரம் குறைந்த வகுப்பு பெண் என விமர்சித்த தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக ரூ.50 கோடிக்கு கேட்டு வழக்கு தொடரப் போவதாக ராக்கி சாவந்த் மிரட்டல் விடுத்து உள்ளார்.
மும்பை, 

தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

இந்த பரபரப்பான நிலையில்  நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த  சம்பவத்தில்  பல நடிகர்-நடிகைகள் அவருக்கு  ஆதரவு அளித்தனர். ஆனால் அந்த படத்தில் அந்த பாடலில்  தனுஸ்ரீக்கு பதில் நடித்த நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் என கூறினார். மேலும் அவர் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக  ராக்கி சாவந்து எதிராக  ரூ 10 கோடிக்கு  கேட்டு ஒரு அவதூறு வழக்கை  தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார்.

தனுஸ்ரீ தத்தாவின் வக்கீல் நிதின் சதொபுதே  ரிபப்ளிக்  டிவிக்கு அளித்த பேட்டியில், 

என் கட்சிக்காரரின் புகழ்  மற்றும் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய  ராக்கி சாவந்த் மீது ஒரு குற்றவியல் மற்றும் ஒரு  அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளோம். அவர் அதற்கு நஷ்ட ஈடாக திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால், அவர் இரண்டு ஆண்டுகளுக்கு தண்டிக்கப்படுவார் அல்லது அபராதம் விதிக்கப்படுவார் அல்லது இரண்டும் கிடைக்கலாம் என கூறினார்.

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ராக்கி சாவந்த் ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடரப் போவதாக தனு ஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம்   மிரட்டல் விடுத்து உள்ளார்.  தன்னை தரம் குறைந்த வகுப்பு பெண் என விமர்சித்த தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிராக ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடருவேன் என கூறி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...