சினிமா செய்திகள்

மீ டூவில் சிக்கிய இசையமைப்பாளர்10 நிகழ்ச்சிகளில் இருந்து அனுமாலிக் நீக்கம் + "||" + Removal from 10 shows

மீ டூவில் சிக்கிய இசையமைப்பாளர்10 நிகழ்ச்சிகளில் இருந்து அனுமாலிக் நீக்கம்

மீ டூவில் சிக்கிய இசையமைப்பாளர்10 நிகழ்ச்சிகளில் இருந்து அனுமாலிக் நீக்கம்
பிரபல இந்தி இசையமைப்பாளர் அனுமாலிக் மீ டூவில் சிக்கினார்.
தனது ஸ்டுடியோவுக்கு பாட வரும் பாடகிகளுக்கு அனுமாலிக் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாடகி ஒருவர் கூறும்போது ‘‘அனுமாலிக் என்னிடம், உனக்கு காதலன் இருக்கிறாரா? என்று கேட்டார். நான் இல்லை என்றதும் அப்படி என்றால் தனிமையில் இருப்பாயே என்றார். 

பிறகு என்னை கட்டிப்பிடித்தார். என் உடலை கைகளால் தடவினார். அது ஸ்டூடியோ என்பதால் நான் அலறினாலும் வெளியே கேட்காது. எனவே அவரை தள்ளிவிட்டு வெளியேறி விட்டேன். மும்பையில் தனியாக வசித்த நான் போலீசில் புகார் அளிக்க விரும்பவில்லை’’ என்றார். 

இதுபோல் மேலும் 3 பாடகிகள் அனுமாலிக் மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். அனுமாலிக் இந்தி டெலிவி‌ஷன்களின் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார். பாலியல் புகாரில் சிக்கியதை தொடர்ந்து 10 டெலிவி‌ஷன் இசை நிகழ்ச்சிகளில் இருந்து அவரை நீக்கி விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.