சினிமா செய்திகள்

தீபாவளிக்கு முன்பு 2–ந்தேதி திரைக்கு வரும் விஜய்யின் ‘சர்கார்’? + "||" + Comes to the screen Vijay's Sarkar

தீபாவளிக்கு முன்பு 2–ந்தேதி திரைக்கு வரும் விஜய்யின் ‘சர்கார்’?

தீபாவளிக்கு முன்பு 2–ந்தேதி திரைக்கு வரும் விஜய்யின் ‘சர்கார்’?
விஜய் நடித்துள்ள சர்கார் படத்தை தீபாவளிக்கு முன்னதாக திரைக்கு கொண்டு வர ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்–கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையான வருகிற 6–ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். தமிழ் நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு ஒதுக்கி உள்ளனர். ரசிகர்களும் தீபாவளியை சர்கார் படத்தோடு கொண்டாட பேனர்கள், சுவரொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாக வருகிற 2–ந்தேதி ‘சர்கார்’ படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2–ந்தேதி வெள்ளிக்கிழமை என்பதாலும் தொடர்ந்து விடுமுறையாக இருப்பதாலும் முன்னதாக படத்தை வெளியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது. 

எனவே இந்த வாரத்திலேயே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்புகிறார்கள். ‘சர்கார்’ படத்தில் ராதாரவி, வரலட்சுமி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் டிரெய்லரை வெளியிட்டு படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர். படத்தில், வெளிநாட்டில் பெரிய தொழில் அதிபராக இருக்கும் விஜய் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தமிழகம் வருகிறார். அவரது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு விடுகின்றனர். இதனால் அதிர்ச்சியாகி அரசியல்வாதிகளுடன் மோதுகிறார். நேர்மையான தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். தனக்கு ஆதரவாக இளைஞர்களை திரட்டி மோசமான அரசியல்வாதிகளை வீழ்த்தி எப்படி நல்லாட்சியை ஏற்படுத்துகிறார் என்பது கதை.


தொடர்புடைய செய்திகள்

1. புகைப்பிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது.
2. ”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்
”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி நடிகர் விஜய் உட்பட படக்குழுவினர் கொண்டாடிய படம் வைரலாகி வருகிறது.
3. ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
விஜய்யின் சர்கார் படம் எதிர்ப்பை மீறி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
4. ‘சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம்
திருப்பூரில் ‘சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. டைரக்டர் முருகதாசை கைது செய்ய தடை ஐகோர்ட்டு உத்தரவு
‘சர்கார்’ படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை வருகிற 27-ந் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.