சினிமா செய்திகள்

பணியிடங்களில் பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தப்பிக்க வழி : ராக்கி சாவந்த் கேலி வீடியோ + "||" + Rakhi Sawant Women Should Wear A Lock - Chain Inside Their Pants For Safety

பணியிடங்களில் பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தப்பிக்க வழி : ராக்கி சாவந்த் கேலி வீடியோ

பணியிடங்களில் பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தப்பிக்க வழி : ராக்கி சாவந்த் கேலி வீடியோ
பணியிடங்களில் நடைபெறும் பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தப்பிக்க என்ன வழி என பாலிவுட் பிரபலம் ராக்கி சாவந்த் கேலி வீடியோ ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்!
மும்பை,

பத்திரிக்கை துறை, சினிமா துறை என பாகுபாடு இல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நிகழ்ந்து வருகிறது. இதை மாற்றவே பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து #Metoo மூலம் பேசி வருகின்றனர்.

தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பிரபல நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு ஒன்றில் பாலியல் ரீதியாக தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.

இது இந்தி திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது வக்கீல் மூலம் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

இந்த பரபரப்பான நிலையில்  நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த  சம்பவத்தில்  பல நடிகர்-நடிகைகள் அவருக்கு  ஆதரவு அளித்தனர். ஆனால் அந்த படத்தில் அந்த பாடலில்  தனுஸ்ரீக்கு பதில் நடித்த நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தா ஒரு பொய்யர் என கூறினார். மேலும் அவர் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக  ராக்கி சாவந்து எதிராக  ரூ 10 கோடி  கேட்டு ஒரு அவதூறு வழக்கை  தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து உள்ளார்.

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள ராக்கி சாவந்த் ரூ. 50 கோடி கேட்டு வழக்கு தொடரப் போவதாக தனு ஸ்ரீ தத்தாவுக்கு இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம்  மிரட்டல் விடுத்து இருந்தார்.

இது குறித்து ராக்கி சாவந்த் கூறும் போது;-

இந்த விஷயங்களைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன். ஆனால் இன்று நான் உணர்கிறேன். என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும், கொலை செய்யப் போவதாகவும்  எனக்கு மிரட்டல் வருகிறது. இது குறித்து நான் போலீசில் புகார் செய்யப் போகிறேன்  என கூறி உள்ளார்.

இந்த நிலையில் பெண்கள் தங்களை பணியிடங்களில் பாதுகாத்துக் கொள்ள  என்ன செய்ய வேண்டும் என  ஒரு கேலி வீடியோ வெளியிட்டு உள்ளார். ராக்கி சாவந்தின் வீடியோ தற்போது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஊடகவாசிகள்  ராக்கியினை திட்டி தீர்த்து வருகின்றனர்.