சினிமா செய்திகள்

புதிய தோற்றம் வெளியானதுஅஜித் படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி + "||" + Ajith film will be released for Pongal

புதிய தோற்றம் வெளியானதுஅஜித் படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி

புதிய தோற்றம் வெளியானதுஅஜித் படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதி
விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து படம் பற்றிய தகவல்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். ஏற்கனவே தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் தள்ளிப்போனது. 

படத்தில் அஜித்குமார் வயதானவராகவும் இளமையாகவும் இருப்பதுபோன்ற முதல் தோற்றம் சமீபத்தில் வெளியானது. அதை வைத்து அவர் இரட்டை வேடங்களில் நடிப்பது தெரிய வந்தது. ‘விஸ்வாசம்’ பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது. படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. 

ஆனால் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என்றும் எனவே விஸ்வாசம் பொங்கலுக்கு வராது என்றும் தகவல்கள் பரவின. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில் படக்குழுவினர் அஜித்குமாரின் புதிய தோற்றத்தை நேற்று வெளியிட்டனர். 

அதில் விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புதிய தோற்றத்தில் அஜித்குமார் தலையில் ஹெல்மெட் அணிந்து இரு கைகளை உயரே தூக்கியபடி புல்லட் ஓட்டிக்கொண்டு வரும் காட்சி இடம்பெற்று இருந்தது. இந்த படத்தையும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். 

விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சிவா டைரக்டு செய்கிறார். இந்த படத்திலும் அஜித்குமார் தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...