சினிமா செய்திகள்

பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? -பிரகாஷ்ராஜ் ஆவேசம் + "||" + Operate is against actresses? -Praksharaj Furious

பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? -பிரகாஷ்ராஜ் ஆவேசம்

பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? -பிரகாஷ்ராஜ் ஆவேசம்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? என்று பிரகாஷ்ராஜ் ஆவேசமாக கூறினார்.
‘மீ டூ’ இயக்கம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் முகநூலில் கூறியிருப்பதாவது:-

“சினிமா துறையில் உள்ள பல பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். ஆனால் புகார் சொன்னவர்களை எதிர்த்து கேள்வி எழுப்பும் நிலைமை உள்ளது. இதில் எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள். குற்றம் சொல்லும் நடிகைகளை வாயை மூட வைப்பதில் ஈடுபடுகின்றனர்.

யார் தூண்டுதலில் புகார் சொல்கிறாய்? அரசியல் பின்னணி உள்ளதா? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். இது பாதிக்கப்பட்டவர்களை அடக்கும் முயற்சி ஆகும். அர்ஜூன் மீது சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியிருக்கிறார். ஆனால் அனைவரும் சுருதிக்கு எதிராக பேசுகிறார்கள். இந்த பிரச்சினையில் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கூறினேன். இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்.”

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சுருதி ஹரிகரன் மீது அர்ஜூன் சார்பில் ரூ.5 கோடி கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சுருதி ஹரிகரன் கூறும்போது, “ஒரு பெண் நியாயம் கேட்டு போராடினால், அவளை பலிகடா ஆக்குகின்றனர்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார்: நடிகர் அர்ஜூனுக்கு பிரகாஷ்ராஜ் ‘திடீர்’ ஆதரவு ‘இருவரையும் அழைத்து பேசி திரைத்துறையினர் தீர்வு காண வேண்டும்”
நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் தெரிவித்த விவகாரத்தில் நடிகர் அர்ஜூனுக்கு, நடிகர் பிரகாஷ்ராஜ் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இருவரையும் அழைத்துப் பேசி பிரச்சினைக்கு திரைத்துறையினர் தீர்வு காண வேண்டும் என்கிறார்.