சினிமா செய்திகள்

‘வட சென்னை’ படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்படக்குழு அறிவிப்பு + "||" + Dismissal of the controversy in the vada chennai film

‘வட சென்னை’ படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்படக்குழு அறிவிப்பு

‘வட சென்னை’ படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்படக்குழு அறிவிப்பு
‘வட சென்னை’ படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடித்த வட சென்னை படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், அருவறுப்பான வசனங்களும் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று மீனவர் நல சங்கத்தினர் வற்புறுத்தினர்.

சர்ச்சை காட்சிகளையும், வசனங்களையும் நீக்காவிட்டால் வருகிற 29-ந் தேதி சாஸ்திரி பவன் எதிரில் போராட்டம் நடத்துவோம் என்று தணிக்கை குழு அதிகாரிக்கு திரைப்பட பாதுகாப்பு கழக தலைவர் கே.ராஜன் கடிதம் அனுப்பினார். இதைத் தொடர்ந்து சர்ச்சை காட்சிகளை நீக்கி விடுவோம் என்று படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, “வடசென்னை படம் எந்த ஒரு தனி நபரையோ, சமுதாயத்தையோ பற்றியது அல்ல. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். படத்தில் கடலுக்குள் அமீரும், ஆண்ட்ரியாவும் நடித்த முதல் இரவு காட்சியையும், சில வசன காட்சிகளையும் நீக்க முடிவு செய்து இருக்கிறோம்” என்றார்.

இதைத் தொடர்ந்து வட சென்னை படத்தை தணிக்கை குழுவுக்கு மீண்டும் அனுப்பி வைத்து முதல் இரவு காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர் ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு காட்சிகளை இணைத்துள்ளனர்.

அதுபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் சர்ச்சை வசனங்களும் நீக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...