சினிமா செய்திகள்

16 வயது குறைந்தவருடன் நடிகை சுஷ்மிதா சென் காதல் + "||" + Actress Sushmita Sen is love with a 16-year-old man

16 வயது குறைந்தவருடன் நடிகை சுஷ்மிதா சென் காதல்

16 வயது குறைந்தவருடன் நடிகை சுஷ்மிதா சென் காதல்
தன்னைவிட 16 வயது குறைந்தவர் மீது, நடிகை சுஷ்மிதா சென் காதல் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் ‘சக்கலக்க பேபி. லுக்குவிட தோனலையா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்து இருந்தார். ஐதராபாத்தில் பிறந்த இவர் இந்தியா தரப்பில் முதன் முதலில் பிரபஞ்ச அழகி என்ற பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷ்மிதா சென்னுக்கு 42 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அந்த குழந்தைகளுக்கு ரெனீ சென், அலிசா சென் என்று பெயர் வைத்துள்ளார். சுஷ்மிதா சென்னுக்கும் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த ரொமன் ஷால் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ரொமன் ஷாலுக்கு 27 வயது ஆகிறது. தன்னை விட 16 வயது குறைந்தவரை சுஷ்மிதா சென் காதலிக்கிறார். இருவரும் தாஜ்மஹாலுக்கு ஜோடியாக சென்றுள்ளனர். அங்கு சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தை சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து காதலை உறுதிப்படுத்தி உள்ளார். படத்தின் கீழே எனது வாழ்க்கையின் காதல் என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கனவே நட்சத்திர ஓட்டல் அதிபர் ஒருவருடன் சுஷ்மிதா சென்னுக்கு காதல் மலர்ந்து பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்.