சினிமா செய்திகள்

பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர் - ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல் + "||" + Sexual harassment actor - Srireddy is a new threat

பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர் - ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்

பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர் - ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்
பாலியல் தொல்லை கொடுப்பதாக, நடிகர் ஒருவருக்கு ஸ்ரீரெட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
தெலுங்கு பட உலகில் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறி திரையுலகை அதிர வைத்தவர் ஸ்ரீரெட்டி. பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதில் தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினர்.


இந்த நிலையில் ஐதராபாத்தில் தனக்கு மிரட்டல் இருப்பதாக கூறி அங்கிருந்து வெளியேறி இப்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது. லாரன்சும் தனது அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

சில நாட்களாக அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி இப்போது முன்னணி நடிகர் ஒருவர் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி அடுத்த அதிரடியை தொடங்கி இருக்கிறார். நடிகரின் பெயரை சொல்லாமல் முகநூலில் அவர் கூறியிருப்பதாவது:-

“நடிகர் சங்கத்தில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருக்கும் ஒருவர் கதாநாயகிகளுக்கும் துணை நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கிறார். ஆனால் வெளியில் புத்திசாலித்தனமாக பேசுகிறார். அவரைப்பற்றி எல்லோருக்கும் தெரியும். என்னிடமும் ஆதாரங்கள் உள்ளன.

பதவியை வைத்து பலரை மிரட்டுகிறார். அவரால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வழக்கறிஞர்கள் உதவியுடன் அந்தநடிகரின் அத்துமீறல்களை வெளியே கொண்டு வருவேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டி யாரை சொல்கிறார் என்று விவாதம் நடக்கிறது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வேப்பூர் போலீஸ் ஏட்டு பணியிடைநீக்கம்
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் வேப்பூர் போலீஸ் ஏட்டை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
2. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி கலெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி கலெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
3. பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை: சரண் அடைந்த வாலிபரை காவலில் எடுத்து விசாரணை
புதுக்கடை அருகே பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் சரண் அடைந்த வாலிபரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
4. பணியிடங்களில் பாலியல் தொல்லை வழக்குகள் 4 வருடங்களில் 4 ஆயிரம் சதவிதம் உயர்வு
பணியிடங்களில் பாலியல் தொல்லை வழக்குகள் 4 வருடங்களில் 4 ஆயிரம் சதவிதம் உயர்ந்துள்ளது.
5. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி
‘மீ டூ’ பரபரப்புக்கு முன்பே பாலியல் புகார்களால் திரையுலகை அதிர வைத்தவர் ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்து தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் கூறினார்.