சினிமா செய்திகள்

‘பைரேட் ஆப் தி கரீபியன்’ படத்தில் இருந்து நடிகர் ஜானி டெப் விலகல் + "||" + From the film 'Pirate of the Caribbean' Actor Johnny Depp distortion

‘பைரேட் ஆப் தி கரீபியன்’ படத்தில் இருந்து நடிகர் ஜானி டெப் விலகல்

‘பைரேட் ஆப் தி கரீபியன்’ படத்தில் இருந்து நடிகர் ஜானி டெப் விலகல்
பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் இருந்து நடிகர் ஜானி டெப் விலகினார்.

‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படத்தில் ஜானி டெப் நடித்துள்ள கேப்டன் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரம் பிரபலம். டெட்மென், ஸ்லீப்பி ஹாலோவ், பிரம் ஜெல், சீக்ரெட் விண்டோ உள்பட பல படங்களில் நடித்துள்ள ஜானி டெப் 2003-ம் ஆண்டு ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன், த கர்ஸ் ஆப் த பிளாக் பேர்ல்’ படத்தில் நடித்தார்.


அவரது நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்து போனது. கண்களை உருட்டும் நக்கல் பேச்சு, எதிரிகளுடன் லாவகமாக மோதும் சண்டைகள், தலையில் தொப்பியுடன் வரும் வித்தியாசமான தோற்றம் அனைத்தையும் குழந்தைகளும் இளைஞர்களும் ரசித்தார்கள். இதன் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றார். படத்தின் அடுத்தடுத்த பாகங்களிலும் ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் ஜானி டெப்பே நடித்தார். இப்போது அவருக்கு 55 வயது ஆகிறது. 15 வருடங்களாக ஜாக் ஸ்பாரோவாக வந்த ஜானிடெப் இனிமேல் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படங்களை தயாரித்து வந்த டிஸ்னி ஸ்டுடியோ, அடுத்த பாகங்களில் மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளது. இதனால் ஜானி டெப் அடுத்த பாகங்களில் நடிக்க மாட்டார் என்று அந்த படத்தின் திரைக்கதையாசிரியர் ஸ்டூவர்ட் பீட்டீ தெரிவித்து உள்ளார். அவருக்கு பதிலாக யார் நடிப்பார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் கூறினார். ஜானி டெப் விலகல் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவா
உலக கோப்பை கிரிக்கெட் படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்க தேர்வாகி உள்ளார்.
2. ‘இந்தியன்-2’ படத்துக்காக வர்ம கலை கற்கும் காஜல் அகர்வால்
இந்தியன்-2 படத்துக்காக காஜல் அகர்வால் வர்ம கலை கற்று வருகிறார்.
3. ‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசன் ஜோடி காஜல் அகர்வால்?
இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனின் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. சிக்கலில் ‘சர்கார்’ படம்
சிக்கலில் சர்கார் படம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. ‘தி வில்லன்’ படம் வெற்றி பெறுவதற்காக ரசிகர்கள் நூதன வேண்டுதல் ஆடுகளை வெட்டி ரத்தத்தை பேனர்களில் தெளித்தனர்
‘தி வில்லன்‘ படம் வெற்றி பெறுவதற்காக நடிகர் சுதீப்பின் ரசிகர்கள் நூதன முறையில் வேண்டுதல் நடத்தினர். அதாவது ஆடுகளை வெட்டி அதன் ரத்தத்தை சுதீப்பின் பேனர்களில் தெளித்தனர்.