சினிமா செய்திகள்

சர்கார் திரைப்படத்தின் கதை பொதுவான கருவைக்கொண்டது; அது திருடப்பட்டது என்பது சரியல்ல- ஜெயமோகன் + "||" + story of Sarkar's film has a common embryo. It is not right that it was stolen- Jeyamohan

சர்கார் திரைப்படத்தின் கதை பொதுவான கருவைக்கொண்டது; அது திருடப்பட்டது என்பது சரியல்ல- ஜெயமோகன்

சர்கார் திரைப்படத்தின் கதை பொதுவான கருவைக்கொண்டது; அது திருடப்பட்டது என்பது சரியல்ல- ஜெயமோகன்
சர்கார் திரைப்படத்தின் கதை பொதுவான கருவைக்கொண்டது; அது திருடப்பட்டது என்பது சரியல்ல என எழுத்தாளர் ஜெயமோகன் கூறி உள்ளார்.
சென்னை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்த  நிலையில் சர்கார் திரைப்படத்தின் கதை பொதுவான கருவைக்கொண்டது. அது திருடப்பட்டது என்பது சரியல்ல என எழுத்தாளர் ஜெயமோகன் கூறி உள்ளார்.

சேலம் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்க வந்த எழுத்தாளர் ஜெயமோகன் நிருபர்களிடம் கூறியதாவது:

சர்கார் திரைப்படத்தின் கதை ஒரு பொதுவான கருவை கொண்டது. தேர்தலின்போது நடிகர் சிவாஜியின் ஓட்டை ஒருவர் போட்டு விடுகிறார். நாடு முழுவதும் அறியப்பட்ட ஒரு பிரபலத்தின் ஓட்டை வேறொருவர் போட்டு விடுகிறார். இது எல்லோரும் அறிந்தது. இதுபொதுவான கரு. இந்த கருவை வைத்து எல்லோருமே கதை எழுதலாம். அதற்காக எல்லா கதைகளும் ஒன்றாகிவிடாது. சர்கார் திரைப்படத்தின் கதை பொதுவான கருவைக்கொண்டது. அது திருடப்பட்டது என்பது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. சர்ச்சைகளுக்கு மத்தியில், ‘சர்கார்!’
விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம், ‘சர்கார்.’
2. புகைப்பிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே சர்ச்சைகளில் சிக்கியது.
3. ”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்
”சர்கார்” வெற்றியைக் கேக் வெட்டி நடிகர் விஜய் உட்பட படக்குழுவினர் கொண்டாடிய படம் வைரலாகி வருகிறது.
4. ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
விஜய்யின் சர்கார் படம் எதிர்ப்பை மீறி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
5. ‘சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம்
திருப்பூரில் ‘சர்கார்’ படம் திரையிட்ட தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.