சினிமா செய்திகள்

சர்க்கார் பட பிரச்சனைக்கு நடிகை வரலட்​சுமி ஆதரவு + "||" + Actress Varalaxmi support for Sarkar film problem

சர்க்கார் பட பிரச்சனைக்கு நடிகை வரலட்​சுமி ஆதரவு

சர்க்கார் பட பிரச்சனைக்கு நடிகை வரலட்​சுமி ஆதரவு
சர்கார் படத்தின் கதை சர்ச்சை விவகாரத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு துணை நிற்பதாக நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை வரலட்சுமி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு அவர்களுக்கு துணை நிற்பதாகவும், உண்மை வெல்லும் , காலம் இதற்கு பதில் சொல்லும் எனவும் கூறியுள்ளார். 

முருகதாஸ் இயக்கியுள்ள 'சர்கார்' படத்திற்கான கதை, தம்முடையது என தமது கதையில் இருந்து திருடப்பட்டுள்ளதாக 'செங்கோல்' படத்தின் கதையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என, துணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்கியராஜ், வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், சர்ச்சை அதிகரித்துள்ளது.