சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் ஆபாச பேச்சு - தமிழ் நகைச்சுவை நடிகர் மீது நடிகை புகார் + "||" + In Filming porn talk - Actress on Tamil comedian Report

படப்பிடிப்பில் ஆபாச பேச்சு - தமிழ் நகைச்சுவை நடிகர் மீது நடிகை புகார்

படப்பிடிப்பில் ஆபாச பேச்சு - தமிழ் நகைச்சுவை நடிகர் மீது நடிகை புகார்
படப்பிடிப்பில் ஆபாசமாக பேசியதாக, தமிழ் நகைச்சுவை நடிகர் மீது நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
நடிகைகள் ‘மீ டூ’வில் பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கன்னட நடிகை சங்கீதா பட் என்பரும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை வெளியிட்டு இருந்தார். இவர் தமிழில் லொள்ளுசபா, ஜீவா நடித்த ஆரம்பமே அட்டகாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாலியல் தொல்லை குறித்து முகநூலில் கூறியதாவது:-


எனக்கு 15 வயது இருக்கும்போதே இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக அவரது காரில் அழைத்துச் சென்று சில்மிஷங்கள் செய்தார். நான் அதிர்ச்சியானேன். 2016-ல் தமிழில் டி.வி நகைச்சுவை நடிகர் கதாநாயகனாக நடித்த படத்தில் நடித்தேன். அவரது பைக் பின்னால் நாம் அமர்ந்து செல்வதுபோன்ற காட்சியை எடுத்தனர். பைக்கை வேகமாக ஓட்டி சென்று திடீரென்று நிறுத்தினார். அப்போது என்னிடம் நீங்க அந்த பிராவா அணிந்து இருக்கிறீர்கள் என்று கேட்டு ஆபாசமாக பேசினார். மேலும் சில முன்னணி நடிகர்கள் இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுத்தனர் என்று அவர் கூறியிருந்தார்.

மேலும் அவர் முகநூலில் கூறும்போது, “விளம்பரத்துக்காக பாலியல் புகாரை கூறவில்லை. யாருடைய பெயரையும் நான் சொல்லவில்லை. அந்த சம்பவங்கள் எனக்கு வேதனையை ஏற்படுத்தியதால் வெளிப்படுத்தினேன். இப்போது சினிமாவை விட்டு விலகி அமைதியாக வாழ்கிறேன். என்னைப்பற்றி தவறாக பேச வேண்டாம்” என்றார்.