சினிமா செய்திகள்

எடை குறைப்பு சிகிச்சை முடிந்ததும் நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் + "||" + Actress Anushka gets married after her weight loss treatment

எடை குறைப்பு சிகிச்சை முடிந்ததும் நடிகை அனுஷ்காவுக்கு திருமணம்

எடை குறைப்பு சிகிச்சை முடிந்ததும் நடிகை அனுஷ்காவுக்கு திருமணம்
எடை குறைப்பு சிகிச்சை முடிந்ததும் நடிகை அனுஷ்காவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. 2005-ல் சினிமாவில் அறிமுகமான அவருக்கு அருந்ததி படம் திருப்புமுனையாக அமைந்தது. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி என்று பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். பாகுபலி, ருத்ரமாதேவி படங்களும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக அனுஷ்கா உடல் எடையை கூட்டினார். அதன்பிறகு அதை குறைக்க முடியவில்லை. உடற்பயிற்சி, யோகா செய்தும் பலன் இல்லை. எடை கூடியதால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து விட்டன. ஒரு வருடமாக புதிய படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் எடை குறைப்புக்காக நார்வே சென்று இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு சில வாரங்கள் தங்கி சிகிச்சை பெறுகிறார். சிகிச்சை முடிந்து ஐதராபாத் திரும்பியதும் அனுஷ்கா திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. மாப்பிள்ளையை முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அனுஷ்காவுக்கு இப்போது 36 வயது ஆகிறது. பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமான பிரபாசையும் அனுஷ்காவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை இருவருமே மறுத்தனர். பிரபாசுக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க உள்ளது.