ஆடையை விமர்சித்து ‘மீம்ஸ்’ போட்டவர்களுக்கு சின்மயி பதிலடி


ஆடையை விமர்சித்து ‘மீம்ஸ்’ போட்டவர்களுக்கு சின்மயி பதிலடி
x
தினத்தந்தி 29 Oct 2018 11:00 PM GMT (Updated: 29 Oct 2018 10:11 PM GMT)

ஆடையை விமர்சித்து ‘மீம்ஸ்’ போட்டவர்களுக்கு சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.


தமிழகத்தில் மீ டூ விவகாரம் விசுவரூபம் எடுப்பதற்கு முதல் காரணமாக இருந்தவர் பாடகி சின்மயி. கவிஞர் வைரமுத்து மீது அவர் பாலியல் புகார் சொன்ன பிறகு மற்றவர்களும் துணிச்சலாக பேசினர். பாலியல் தொல்லையில் சிக்கிய பெண்கள் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து அனுபவங்களை பகிர்ந்தனர்.

அப்போது சின்மயி அணிந்து வந்திருந்த ஆடை சர்ச்சையை கிளப்பியது. அந்த உடைக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்கின்றன. பாடகிகள் சுசிலா, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.பி.சைலஜா, சொர்ணலதா, சித்ரா, சுஜாதா ஆகியோர் சேலை மற்றும் பாரம்பரிய உடைகள் அணிந்திருப்பது போன்ற படங்களை வெளியிட்டு பாடகிகள் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று சின்மயி தோற்றத்தை ஒப்பிட்டு மீம்ஸ் வெளியிட்டும் விமர்சித்தனர்.

சின்மயியை ஆதரிப்பவர்கள், “இப்படி மீம்ஸ் போடுற உண் பார்வையே தவறு. என்று தீரும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் உடல் சார்ந்த உளவியல் பார்வை, பெண் போதை பொருள் இல்லை. அவர் நம் சக மனுஷி. ஆடை பெண்களின் தனி உரிமை. மீம்ஸ் கண்டனத்துக்குரியது என்று சொல்லி எதிர்த்தனர். பொது இடத்துக்கு வரும்போது பெண்கள் உள்ளாடை தெரியாத மாதிரி உடை அணிய கற்றுக் கொள்வதும் நல்லதுதான். மீம்ஸ் சரிதான் என்றும் சிலர் கருத்துக்கள் வெளியிட்டனர்.

மீம்ஸ் போட்டவர்களுக்கு பதிலடி கொடுத்து சின்மயி டுவிட்டரில் கூறும்போது “பாடகிகள் சேலை அணியவேண்டும் என்றும் நான் அணிந்த உடையை விமர்சித்தும் மீம்ஸ் போட்டுள்ளனர். கழுத்து வலியை தவிர்க்கவே அப்படி அணிந்து இருந்தேன்” என்று கூறியுள்ளார்.


Next Story