சினிமா செய்திகள்

இந்தி நடிகையுடன்சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் + "||" + Santhanam will act as hero New movie

இந்தி நடிகையுடன்சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்

இந்தி நடிகையுடன்சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இந்தி நடிகை அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படம் வெற்றி பெற்றதை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘தில்லுக்கு துட்டு-2’ என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. இந்த படத்தை அடுத்து சந்தானம் இன்னொரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தாரா அலிசா பெர்ரி நடிக்கிறார். இவர், ஐந்துக்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரங்களில் யதீன் கார்கேயர், மொட்டை ராஜேந்திரன், சாய்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி ஜான்சன் டைரக்டு செய்கிறார். எஸ்.ராஜ் நாராயணன் தயாரிக்கிறார்.

காதலும், நகைச்சுவையும் கலந்த கதை, இது. இதில், வட சென்னையில் வசிக்கும் ஒரு சராசரி இளைஞராக வருகிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. ‘தில்லுக்கு துட்டு-2’ படம் வெளிவர இருக்கும் நிலையில், சந்தானம் புதிய படத்தில் நடிக்க தொடங்கியிருப்பது, அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்து இருக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...