சினிமா செய்திகள்

‘தேவ்’ படத்தில்கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் + "||" + Karthi Paired Rahul Breit Singh

‘தேவ்’ படத்தில்கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங்

‘தேவ்’ படத்தில்கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங்
கார்த்தி-ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்கும் புதிய படத்துக்கு, ‘தேவ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
 ‘தேவ்’ படத்தின் டைரக்டர் ரஜத் ரவிசங்கர் கூறியதாவது:-

கார்த்தியின் ‘தேவ்’ கதாபாத்திரத்தின் தோற்றத்தையும், காட்சி அமைப்புகளையும் பார்த்ததுமே இளம் பெண்களை காதல்வசப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. காதலுடன் மட்டுமல்லாமல், ஒரு இளைஞன் தான் நினைப்பதை சாதிப்பதற்கு எந்தமாதிரியான சவால்களை எதிர்த்து போராடுகிறான்? என்பதையும் விளக்கும் படம், இது.

இதில், கதாநாயகியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். பெயருக்கு கதாநாயகி என்று இல்லாமல், கார்த்திக்கு இணையாக இவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பல காட்சிகளில் தனது அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தில் கார்த்தியின் அப்பாவாக பிரகாஷ்ராஜ், ரகுல் ப்ரீத்சிங்கின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கார்த்திக், நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.லட்சுமண் தயாரிக்கிறார்.”

ஆசிரியரின் தேர்வுகள்...