சினிமா செய்திகள்

செல்போன் தட்டிவிட்ட விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் - நடிகர் சிவக்குமார் + "||" + Actor Sivakumar says fan 'selfie' was an invasion of privacy, apologises

செல்போன் தட்டிவிட்ட விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் - நடிகர் சிவக்குமார்

செல்போன் தட்டிவிட்ட விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் - நடிகர் சிவக்குமார்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை தட்டி விட்டதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் சிவக்குமார்.
சென்னை

மதுரையில் \ தனியார் கருத்தரிப்பு மையத்தை நடிகர் சிவகுமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். ரிப்பன் கட் பண்ணுவதற்கு சிவகுமார் அருகில் வரும்போது, ஓரமாக நின்ற ரசிகர் ஒருவர் தனது செல்போனை உயர்த்தி செல்பி எடுக்கும் ஆவலில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத நேரத்தில் சிவகுமார் திடீரென செல்பி எடுக்கும் இளைஞர் கையிலிருந்த செல்போனைத் தட்டிவிட்டார். அந்த இளைஞர் கடும் அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ பதிவு பெரும் வைரலாகப் பரவியது. இதை வைத்து மீம்ஸ் எல்லாம் உருவாக்கி வெளியிட்டார்கள். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இளைஞர் செல்போனைத் தட்டி விட்டது ஏன் என்று சிவகுமார் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் செல்போனை தட்டி விட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து சிவகுமார் புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் 
ஆர்வமிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்ன இருந்தாலும் சிவகுமார் செல்போனை தட்டி விட்டது தவறு என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமாற நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. கேம் ஆஃப் த்ரோன்ஸ் 8-வது சீசனின் முதல் எபிசோட் வெளியானது - ட்ரெண்டிங்கில் முதலிடம்
இன்று வெளியான ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஆங்கிலத் தொடரின் 8-வது சீசனின் முதல் எபிசோட் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலக அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
2. தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு
தவறாக நடந்து கொண்ட வாலிபர் கன்னத்தில் அறைந்த குஷ்பு வைரலாகும் வீடியோ.
3. இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல்
இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்- திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
4. குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய நடிகை
குடிபோதையில் போலீஸ்காரர்களை தாக்கிய மும்பை டிவி நடிகை ரூகி சிங் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
5. ராதாரவி சர்ச்சை பேச்சு: தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி - நயன்தாரா
தன்னை குறித்து ராதாரவி தவறாக பேசிய விவகாரத்தில் தனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி என நடிகை நயன்தாரா தெரிவித்து உள்ளார்.