சினிமா செய்திகள்

வீடு புகுந்து தாக்கும் வீடியோ வெளியானது : 2 மனைவிகள் அடிதடியால் கன்னட நடிகர் தவிப்பு + "||" + 2 wives are beaten Kannada actor helplessness

வீடு புகுந்து தாக்கும் வீடியோ வெளியானது : 2 மனைவிகள் அடிதடியால் கன்னட நடிகர் தவிப்பு

வீடு புகுந்து தாக்கும் வீடியோ வெளியானது : 2 மனைவிகள்  அடிதடியால் கன்னட நடிகர் தவிப்பு
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய். இவரது மனைவி நாகரத்னா. இவர்களுக்கு மோனிஷா, மோனிகா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த 2016–ல் மாடல் அழகியும் சாப்ட்வேர் என்ஜினீயருமான கீர்த்தி கவுடாவுடன் துனியா விஜய்க்கு காதல் ஏற்பட்டு 2–வது திருமணம் செய்து கொண்டு அவருடனேயே வசித்தார்.

முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்தார். 2 மனைவிகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் கீர்த்தி கவுடா வீட்டுக்கு மகளுடன் நேரில் சென்று முதல் மனைவி நாகரத்னா தகராறு செய்தார். ஒருவரை யொருவர் கடுமையாக தாக்கி அடிதடியில் இறங்கினர். இதில் கீர்த்திக்கு காயம் ஏற்பட்டது.


அவர் நாகரத்னா மீது போலீசில் புகார் செய்தார். பதிலுக்கு நாகரத்னாவும் கீர்த்தி மீது புகார் கொடுத்தார். இந்த நிலையில் கீர்த்தி கவுடா வீட்டுக்கு சென்று நாகரத்னா தாக்கும் வீடியோ இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து நாகரத்னாவிடம் விசாரிக்க போலீசார் சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

இதனால் மகள்கள் மோனிஷா, மோனிகா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துனியா விஜய் 2–வது மனைவியுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்து நாகரத்னா தவறுக்காக மகள்கள் பாதிக்க கூடாது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதை போலீசார் ஏற்றுக் கொண்டனர். நாகரத்னாவை போலீசார் தேடி வருகிறார்கள். 2 மனைவிகள் மோதலால் துனியா விஜய் தவிப்பில் உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...