படங்களுக்கு சாதி பெயர்கள் வைக்க சித்தார்த் எதிர்ப்பு


படங்களுக்கு சாதி பெயர்கள் வைக்க சித்தார்த் எதிர்ப்பு
x
தினத்தந்தி 31 Oct 2018 11:15 PM GMT (Updated: 31 Oct 2018 6:12 PM GMT)

படங்களுக்கு சாதி பெயர்கள் வைக்க சித்தார்த் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

கவிஞர் வைரமுத்து–பாடகி சின்மயி விவகாரத்தில் பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள மாரிமுத்து கருத்து தெரிவிக்கும்போது, ‘‘அவர் பெண்ணைத்தானே கூப்பிட்டார். ஆணை அழைத்தால்தான் தவறு’’ என்று கூறியிருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த் கண்டனம் தெரிவித்தார். இப்போது மீண்டும் டுவிட்டரில் சித்தார்த் கூறியிருப்பதாவது:–

‘‘மாரிமுத்து குறுகிய மனம் கொண்டவர். ஏமாற்றம் தரக்கூடிய மனிதாராகவும் இருக்கிறார். அவரது கருத்து என்னை காயப்படுத்தியது. பரியேறும் பெருமாள் எனக்கு பிடித்த படம். அதில் அவர் நடித்து இருக்க கூடாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நடித்து விட்டார். சமத்துவம் மற்றும் மாற்றத்துக்கான படமாக அது அமைந்தது.

சாதி ஆணவத்தை பற்றி பேசும் படங்களுக்கு எதிராக தமிழில் நல்ல படங்களை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட சாதியை உயர்த்தி பேசும் பட தலைப்புகளுக்கும் கதை மற்றும் வசனங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சாதி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சாபம். அனைவரும் ஒன்று சேர்ந்து அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

நான் ஒரு அமானுஷ்ய படம் எடுத்தபோது சமூகத்தில் நாங்கள் இதுபோன்ற நம்பிக்கைகளை ஊக்குவிக்கவில்லை என்று தணிக்கை குழுவினர் அறிவிக்கும்படி கூறினார்கள். இதே முறையை சாதி ரீதியிலான படங்களிலும் தணிக்கை குழுவினர் பின்பற்றலாம்.’’

இவ்வாறு சித்தார்த் கூறினார்.

Next Story