சினிமா செய்திகள்

திருமணத்துக்கு தயாராகிறார் : பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.9 கோடிக்கு நகைகள் + "||" + Priyanka Chopra gets ready for wedding!

திருமணத்துக்கு தயாராகிறார் : பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.9 கோடிக்கு நகைகள்

திருமணத்துக்கு தயாராகிறார் : பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.9 கோடிக்கு நகைகள்
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. குவாண்டிகோ டி.வி. தொடர் மூலம் ஹாலிவுட்டிலும் பிரபலமானார்.
 பிரியங்கா சோப்ராவுக்கும் புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் காதல் மலர்ந்துள்ளது. பிரியங்கா சோப்ராவுக்கு 36 வயது ஆகிறது. நிக் ஜோனசுக்கு 25 வயது.

இருவரும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். கடந்த ஜூலை மாதம் மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. டிசம்பர் மாதம் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. ஜோத்பூரில் திருமணம் நடக்கலாம் என்று தெரிகிறது. பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோனசும் சமீபத்தில் ஜோத்பூருக்கு நேரில் சென்று இடத்தை பார்த்துவிட்டு வந்தனர்.


திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற பிரியங்கா சோப்ரா முடிவு செய்துள்ளார். இதற்காக அங்கு பெரும் கோடீஸ்வரர்கள் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ரூ.48 கோடிக்கு புதிய வீடு ஒன்றை வாங்கி உள்ளனர். திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தற்போது தொடங்கி உள்ளன. அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சிகள் தடபுடலாக நடக்கின்றன.

திருமணத்துக்காக பிரத்யேகமான ரூ.7.5 கோடி மதிப்புள்ள வைர மாலையையும், ரூ.2.1 கோடி மதிப்புள்ள மோதிரத்தையும் பிரியங்கா சோப்ரா வாங்கி இருக்கிறார். அவற்றை தற்போது அணிந்து வருகிறார். திருமணத்துக்கு வாங்கிய ஆடைகளையும் சேர்த்தால் மொத்த செலவு ரூ.10 கோடியை தாண்டும் என்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கவர்ச்சி படங்கள் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா, யாஷிகாவை விமர்சித்த ரசிகர்கள்
நடிகைகள் சமூக வலைத்தளத்தில் அரைகுறை ஆடையிலும், நீச்சல் உடையிலும் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்கள். பட விழாக்களுக்கும் கவர்ச்சி உடையில் வருகிறார்கள்.
2. பிரியங்கா சோப்ராவின் திருமணத்துக்கான அரண்மனை வாடகை ரூ.43 லட்சம்
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
3. ஜோத்பூர் அரண்மனையில் நடக்கிறது : பிரியங்கா சோப்ரா திருமண ஏற்பாடுகள்
இந்தி நட்சத்திர ஜோடி தீபிகா படுகோனே–ரன்வீர்சிங் திருமணம் இத்தாலியில் ஆடம்பரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் அடுத்து நடிகை பிரியங்கா சோப்ரா–அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸ் திருமணத்தில் அனைவரது கவனமும் திரும்பி இருக்கிறது.
4. திருமண புகைப்படங்களை ரூ.18 கோடிக்கு விற்ற பிரியங்கா சோப்ரா
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.