சினிமா செய்திகள்

படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது : விஜய், அஜித், சூர்யாவின் புதிய படங்கள் + "||" + As soon as the shooting starts: Vijay, Ajith, Suriya's new films

படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது : விஜய், அஜித், சூர்யாவின் புதிய படங்கள்

படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது : விஜய், அஜித், சூர்யாவின் புதிய படங்கள்
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் பணிகளுக்கு நடுவில் படங்களிலும் நடிக்கிறார்கள். கமல்ஹாசன் தேவர் மகன், இந்தியன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்கிறார்.
 ரஜினிகாந்தும் ஏ.ஆர்.முருகதாசிடம் கதை கேட்டு இருக்கிறார். 2.0, பேட்ட படங்கள் திரைக்கு வந்ததும் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

விஜய், அஜித், சூர்யா ஆகியோரும் புதிய படங்களில் நடிக்க தயாராகின்றனர். விஜய்யின் சர்கார் தீபாவளிக்கு வெளியாகிறது. அடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்கிறார். இவர்கள் கூட்டணியில் வந்த தெறி, மெர்சல் படங்கள் வரவேற்பை பெற்றன. எனவே புதிய படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.


இது விஜய்க்கு 63–வது படமாகும். கதாநாயகி உள்ளிட்ட இதர நடிகர்–நடிகைகள் தேர்வு நடப்பதாகவும் ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் விஸ்வாசம் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அடுத்து அஜித் நடிக்க உள்ள புதிய படமும் முடிவாகி உள்ளது.

இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கி பிரபலமான வினோத் டைரக்டு செய்ய இருப்பதாகவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் தகவல். இந்த படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானிடம் பேசி வருகின்றனர்.

இதற்கு முன்பு 2006–ல் அஜித் நடிப்பில் வெளிவந்த வரலாறு படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். இது அஜித்குமாருக்கு 59–வது படமாகும். படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்குகிறது. சூர்யா ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்தை முடித்துவிட்டு இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் மாதவனை வைத்து இறுதி சுற்று படத்தை எடுத்து பிரபலமான சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார். இது சூர்யாவுக்கு 38–வது படம். அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்குகிறது.