சினிமா செய்திகள்

கிழிந்த சட்டை போட்ட ரகுல் பிரீத்சிங்குக்கு எதிர்ப்பு + "||" + Against for Ragul Preeth Singh wear in torn shirt

கிழிந்த சட்டை போட்ட ரகுல் பிரீத்சிங்குக்கு எதிர்ப்பு

கிழிந்த சட்டை போட்ட ரகுல் பிரீத்சிங்குக்கு எதிர்ப்பு
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்தவர் ரகுல்பிரீத் சிங், தற்போது சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரகுல்பிரீத் சிங் கிழிந்த சட்டை அணிந்துள்ள தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அந்த படத்தின் கீழ் ‘‘எவ்வளவு உயரத்துக்கு போனாலும் குழந்தைத்தனமான மனதை மட்டும் இழக்க கூடாது’’ என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. படத்தை பார்த்த பலரும் ரகுல் பிரீத்சிங்கை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பிச்சைக்காரர்கள் கூட நல்ல சட்டைபோடும் இந்த காலத்தில் பிச்சைக்காரர்களை விட கேவலமாக சட்டை போட்டு இருக்கிறீர்களே என்று சிலர் கண்டித்து உள்ளனர்.


உங்களுக்கு நல்ல சட்டை வேண்டுமானால் கேளுங்கள் நான் அனுப்பி வைக்கிறேன் என்று இன்னும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர். நடிகை டாப்சியையும் இந்த ஆடை அதிர வைத்துள்ளது.

அவர், ‘‘இவ்வளவு மோசமான ஆடையை தைத்து கொடுத்தவர் யார்?’’ என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி விடுத்தார். அதற்கு ரகுல் பிரீத் சிங், ‘‘எனது குழந்தைத்தனமான மனது’’ என்று பதில் அளித்துள்ளார்.