சினிமா செய்திகள்

கதாநாயகன் ஆன யோகிபாபு + "||" + The protagonist is Yogi Babu

கதாநாயகன் ஆன யோகிபாபு

கதாநாயகன் ஆன யோகிபாபு
யோகிபாபு கதாநாயகனாக, எமன் வேடத்தில் நடிக்கிறார்.

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்துள்ள யோகிபாபு, ‘தர்மபிரபு’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் யோகிபாபு எமன் வேடத்தில் வருகிறார். எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில் புதிய எமனை தேர்வு செய்ய தேர்தல் நடக்கிறது.

அந்த பதவிக்கு வாரிசு அடிப்படையில் யோகி பாபுவும் சித்ரகுப்தனாக இருக்கும் கருணாகரனும் போட்டியிடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார் என்பது கதை. இந்த படத்தை முத்துகுமரன் இயக்குகிறார். இவர் விமல் நடிக்கும் கன்னிராசி படத்தை டைரக்டு செய்து வருகிறார். ஸ்ரீவாரி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் முத்துக்குமரன் கூறும்போது “குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை சிரிக்க வைக்கும் படமாக தர்மபிரபு தயாராகிறது. சமீபத்தில் தனது உடல் மொழியாலும் வசன உச்சரிப்பாலும் குரல் வளத்தாலும் அனைவரையும் தன் ரசிகர்களாக இழுத்து வைத்துள்ள யோகிபாபு எமன் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பெரிய பலம்.

பல கோடி ரூபாய் செலவில் எமலோகம் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார்.