சினிமா செய்திகள்

‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசன் ஜோடி காஜல் அகர்வால்? + "||" + In 'Indian-2' Kamal Haasan to pair with Kajal Agarwal?

‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசன் ஜோடி காஜல் அகர்வால்?

‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசன் ஜோடி காஜல் அகர்வால்?
இந்தியன்-2 படத்தில் கமல்ஹாசனின் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்து 1996-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. ஷங்கரே இதையும் டைரக்டு செய்கிறார். இதிலும் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிந்துள்ளன. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் முடிவு செய்து விட்டனர். நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. முதல் பாகத்தில் சி.பி.ஐ அதிகாரியாக வந்த நெடுமுடி வேணு இதிலும் அதே கதாபாத்திரத்தில் வருகிறார். கதாநாயகியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் குறித்து ஷங்கர் கூறும்போது, “இந்தியன் மாதிரி படங்களை நான் ஏற்கனவே எடுத்து விட்டேன். இந்தியன்-2 படத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்று யோசிப்பதற்காக அதிக நாட்கள் எடுத்துக் கொண்டேன். முழு கதையையும் தயார் செய்து கமல்ஹாசனிடம் சொன்னேன். எழுதும்போது எப்படி ரசித்தேனோ அப்படியே அவரும் ரசித்து கேட்டார். அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளோம்” என்றார்.

இந்தியன் முதல் பாகம் கிளைமாக்சை 80 வயது முதியவராக வரும் கமல்ஹாசன் விபத்தில் சிக்கி மாயமாவது போன்றும் வெளிநாட்டில் இருந்து போன் செய்வது போன்றும் முடித்து இருந்தனர். அதில் இருந்து இரண்டாம் பாகம் கதை தொடங்கும் என்று தெரிகிறது. இந்த படத்திலும் கமல்ஹாசன் வயதானவராகவும் இளைஞராகவும் 2 வேடங்களில் வருகிறார்.