சினிமா செய்திகள்

‘‘சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம்’’ –நடிகை அமிரா தஸ்தூர் + "||" + "Those who are not in the background of the cinema are difficult to win" - Nadigai Amira Thastur

‘‘சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம்’’ –நடிகை அமிரா தஸ்தூர்

‘‘சினிமா  பின்னணி  இல்லாதவர்கள்  ஜெயிப்பது  கஷ்டம்’’ –நடிகை அமிரா தஸ்தூர்
தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமிரா தஸ்தூர். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் சொல்கிறார்:–
சினிமா பின்னணி இல்லாமல் வருபவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். ஆனால் நடிகர்–நடிகைகளின் மகன்களோ, மகள்களோ எளிதாக வாய்ப்புகளை பெறுகிறார்கள். அவர்களுக்கு நடிப்பு திறமையை கூட பரிசோதிப்பது இல்லை. நான் இந்தி படங்களில் வாய்ப்பு தேடி அலைந்தபோது பலரும் என்னை நிராகரித்தனர்.


30 படங்களுக்கு நடந்த நடிகை தேர்வுகளில் கலந்து கொண்டேன். அவற்றில் என்னை ஒதுக்கவே செய்தார்கள். அதன்பிறகு 2013–ம் ஆண்டு இஷாக் படத்தில் நடிக்க தேர்வானேன். முதல் படம் ஓடினால்தான் நிலைக்க முடியும். அது தோல்வி அடைந்தால் இரண்டாவது படம் கிடைப்பது கஷ்டம்.

சினிமா குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எல்லாரும் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் வெளியில் இருந்து வருபவர்களை கண்டுகொள்வது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...