சினிமா செய்திகள்

சரித்திர கதையில் விக்ரம்? + "||" + Vikram in historical story?

சரித்திர கதையில் விக்ரம்?

சரித்திர கதையில் விக்ரம்?
விக்ரம் நடிப்பில் இந்த வருடம் ஸ்கெட்ச், சாமி–2 ஆகிய படங்கள் வந்தன.
கவுதம் வாசுதேவமேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் மற்றும் ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்து விட்டு மலபார் கலகம் என்று அழைக்கப்படும் சரித்திர படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


கேரளாவில் மலபார் பகுதியில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக 1921–ல் தொடங்கிய போராட்டம் இனக்கலவரமாக மாறியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இந்த கதையில் சுதந்திர போராட்ட வீரர் வரியன் குன்னத் குஞ்சாசமகத் ஹாஜியாக விக்ரம் நடிக்கிறார்.

இந்த படத்தை அன்வர் ரஷித் டைரக்டு செய்கிறார். மலபார் கலகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி 2021–ம் ஆண்டு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். மற்ற நடிகர்–நடிகை தேர்வு நடக்கிறது. இந்த படத்தை முதலில் மலையாளத்தில் எடுத்து விட்டு பின்னர் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட முடிவு செய்து உள்ளனர்.

மலபார் கலகத்தை மையமாக வைத்து ஏற்கனவே 1921 என்ற பெயரில் ஐ.வி.சசி இயக்கிய படம் 1988–ல் வெளியானது. இதில் மம்முட்டி கதாநாயகனாக நடித்து இருந்தார்.


ஆசிரியரின் தேர்வுகள்...