சினிமா செய்திகள்

‘‘பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா?’’ – ஹன்சிகா விளக்கம் + "||" + ' Are film opportunities reduced? '' - Hansika explains

‘‘பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா?’’ – ஹன்சிகா விளக்கம்

‘‘பட  வாய்ப்புகள்  குறைந்து  விட்டதா?’’ – ஹன்சிகா விளக்கம்
ஹன்சிகாவுக்கு புதிய நடிகைகள் வரவால் படங்கள் குறைந்து விட்டது என்று பேசப்படுகிறது. இதுகுறித்து அவரிடமே கேட்ட போது ஹன்சிகா அளித்த பதில் வருமாறு:–
‘‘சினிமா வாய்ப்புகள் குறைந்ததாக சொல்வதை நான் ஏற்க மாட்டேன். இவ்வளவு சின்ன வயதில் 50 படங்களில் நடித்து விட்டேன். இத்தனை படங்களில் நடித்து இருப்பது ரொம்ப பெரிய வி‌ஷயம்.

கடந்த ஒரு ஆண்டில் 18 புதிய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்தன. 18 கதைகள் கேட்டேன். ஆனால் அதில் 4 படங்களில் மட்டுமே நடித்தேன்.  எனவே எனக்கு வாய்ப்புகள் வராமல் இல்லை. இதுவரை கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தேன்.

இனிமேல் அதுமாதிரி நடிக்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். வெறும் கவர்ச்சியை மட்டுமே நம்பாமல் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். இதனால்தான் நிறைய கதைகளை தவிர்த்து விட்டேன்.

குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறேன். புதிதாக இனிமேல் யாரையும் தத்தெடுக்கும் திட்டம் இல்லை. ஏற்கனவே தத்தெடுத்தவர்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்தால் போதும் என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்காகவும் முதியோர், ஆதரவற்றோருக்காகவும் ஒரு ஆசிரமம் கட்டுகிறேன். இனி முன்பு போல ஒரு கவர்ச்சி பொம்மையாக என்னை பார்க்க முடியாது. வித்தியாசமான கதைகளுக்காக காத்து இருக்கிறேன்.’’

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...