சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ‘தென் மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடிக்கும்போது, மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை அடைவோம் என்று விஜய் சேதுபதி நினைத்துப் பார்த்து இருப்பாரா? (பி.விக்னேஷ் பாண்டியன், சென்னை–87)

தன்னை ஒரு நடிகராக ஏற்றுக் கொள்வார்களா? என்று சக நடிகர்–நடிகைகளிடம் கவலையுடன் கேட்கிற அளவுக்கு ஒரு அனுதாபகரமான நிலையில் விஜய் சேதுபதி இருந்தார்!

***

‘சாமி–2’ படத்தை தொடர்ந்து ‘சாமி–3’ படம் உருவாகுமா? (எம்.ஆனந்தவேல், கொண்டலாம்பட்டி)

மூன்றாம் பாகத்துக்கான கதை அமைந்தால், நிச்சயம் உருவாகும்!

***

குருவியாரே, காஜல் அகர்வாலுக்கு எது அழகு? அவருடைய கண்களா, உதடுகளா? (என்.ஜெயக்குமார், ஊட்டி)

கண்களில் ஆரம்பித்து கால்கள் வரை காஜல் அகர்வால் அழகு தான் என்கிறார், அவருடைய ஒப்பனை கலைஞர்!

***

மியா ஜார்ஜ் என்ன ஆனார்? அவர் கைவசம் தமிழ் படங்கள் ஏதேனும் வைத்து இருக்கிறாரா? (ஆர்.கோபால், திண்டுக்கல்)

மியா ஜார்ஜ் மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் கைவசம் புதிய தமிழ் படங்கள் எதுவும் இல்லை!

***

குருவியாரே, ‘ஜெமினி’ பட கதாநாயகி கிரண், ‘அம்மா’ வேடத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டாராமே...உண்மையா? (ஜே.சீனிவாசன், ஊத்துக்குளி)

சுந்தர் சி.யின் ‘முத்துன கத்தரிக்கா’ படத்திலேயே கிரண் அம்மா வேடத்தில் நடித்து விட்டார். அந்த படத்தில் அவர், பூனம் பாஜ்வாவுக்கு அம்மாவாக நடித்து இருந்தார்!

***

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில், எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிப்பவர் யார்? (எஸ்.ரவி, காஞ்சீபுரம்)

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் நடிகர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை!

***

குருவியாரே, சரத்குமார் கதாநாயகனாக நடித்த படங்களில் அதிக வசூல் செய்த 3 படங்களை வரிசைப்படி சொல்ல முடியுமா? அவர் கவுரவ வேடத்தில் நடித்து அதிக வசூல் செய்த படம் எது? (எம்.தவமணி, ஆவடி)

சரத்குமார் கதாநாயகனாக நடித்து அதிக வசூல் செய்த படங்கள்: சூரியன், நாட்டாமை, சூர்யவம்சம்! கவுரவ வேடத்தில் நடித்து அதிக வசூல் செய்த படம், ‘காஞ்சனா!’

***

திருமணத்துக்கு பிறகு சமந்தாவின் ‘மார்க்கெட்’ நிலவரம் எப்படியிருக்கிறது? (எஸ்.அரிகிருஷ்ணன், கோணலூர்)

சமந்தாவின் ‘மார்க்கெட்’ நிலவரம் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை!

***

குருவியாரே, இரண்டாந்தர கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த அமலாபாலுக்கு திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்த படங்கள் என்னென்ன? (ஜே.ஜார்ஜ், தூத்துக்குடி)

விஜய் நடித்த ‘தலைவா,’ விக்ரம் நடித்த ‘தெய்வ திருமகள்!’

***

தமன்னா அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறாரா, சைவ உணவுகளை விரும்புகிறாரா? (மே.துரைசிங், பேராவூரணி)

அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிட்டு வந்த தமன்னா, இப்போது சைவத்துக்கு மாறிவிட்டார். அசைவ உணவுகள் பக்கம் அவர் திரும்புவதே இல்லையாம்!

***

குருவியாரே, ‘வட சென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகுமா? அதில், தனுஷ் கதாநாயகனாக நடிப்பாரா? (வி. பாலாஜி, வாணியம்பாடி)

‘வட சென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக தயாராகும்...அதில், தனுஷ் கதாநாயகனாக நடிப்பார் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்!

***

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் ‘கயல்’ ஆனந்தியின் நடிப்பு எப்படி? (இரா.ஜெகநாதன், திருவெறும்பூர்)

ஆனந்தி இதுவரை நடித்த படங்களை விட, ‘பரியேறும் பெருமாள்’ படத்தில், அவருடைய நடிப்பு மெருகேறி இருந்தது!

***

குருவியாரே, தன்னை திருமணம் செய்துகொள்ள யாராவது இருக்கிறார்களா என்று திரிஷா கேட்கிறாரே...? (எஸ்.சாகுல் அமீது, ஆற்காடு)

‘‘ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கூட்டுவதற்காகவே இப்படி ஒரு கேள்வியை திரிஷா கேட்டு இருக்கிறார்’’ என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்!

***

வேறு வேறு மதங்களை சேர்ந்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்வார்களா, மாட்டார்களா? (கே.ரவீந்திரன், மதுரை)

கிறிஸ்தவராக இருந்த நயன்தாரா ஏற்கனவே இந்து மதத்துக்கு மாறிவிட்டார். அதனால் இவர்கள் திருமணத்தில் மத பிரச்சினை இருக்காது!

***

குருவியாரே, ‘காற்றின் மொழி’ படத்தில் விதார்த் என்ன வேடத்தில் நடித்து இருக்கிறார்? (சோ.அன்பழகன், நாகர்கோவில்)

ஜோதிகாவின் கணவராக விதார்த் நடித்து இருக்கிறார்!

***

உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகிய இருவரில், தயாரிப்பாளராகவும் ஜெயித்தவர் யார்? (மா.செல்வசிங், கோவை)

உதயநிதி ஸ்டாலின்! இவர் தயாரிப்பாளராகவும் ஜெயித்து இருக்கிறார். நடிகராகவும் ஜெயித்து இருக்கிறார்!

***

குருவியாரே, ரஜினிகாந்த் நடித்த 100–வது படம் எது, அந்த படத்தை இயக்கியவர் யார்? (த.நேரு, வெண்கரும்பூர்)

படத்தின் பெயர்: ராகவேந்திரா! அந்த படத்தை இயக்கியவர், எஸ்.பி.முத்துராமன்!

***

நடிகர் ராஜேஷ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்? (அ.தினேஷ், வாலாஜாப்பேட்டை)

ராஜேஷ், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தார்!

***

குருவியாரே, நயன்தாராவும், திரிஷாவும் ஒரு படத்தில் அக்காள்–தங்கையாக நடிப்பார்களா? (ஜி.ராமதுரை, திருச்சி)

அப்படி ஒரு படம் திட்டமிடப்பட்டது. ஆனால், பாதியிலேயே அது நின்று போனது!

***

சத்யராஜ் தெலுங்கு படங்களில் அதிகமாக நடிக்கிறாராமே...அவர் இப்போது நடிக்கும் தெலுங்கு படத்தை பற்றி கூற முடியுமா? (கே.ஜெய்சிங், ராசிபுரம்)

‘நான் ஈ’ பட நாயகன் நானி கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய தெலுங்கு படத்தில், சத்யராஜ் நடித்து வருகிறார்!

***

ஆசிரியரின் தேர்வுகள்...